Monetize Your Website or Blog

Friday, 13 May 2016

விஜயகாந்த்துக்குப் பயந்தே வைகோ, திருமா தலைப்பாகை அணிந்துள்ளனர்! - இடிக்கிறார் இளங்கோவன்

விஜயகாந்த், தனது கட்சி வேட்பாளர்களை தாக்குவதைப் போல், தங்களையும் தாக்கி விடுவார் என பயந்தே வைகோ, திருமாவளவன் ஆகியோர் தலைப்பாகை அணிந்துள்ளனர் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் இன்று (12-ம் தேதி) செய்தியாளர்களிடம் பேசுகையில், '' நடைபெறவுள்ள தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். தமிழக மக்கள் பூரண மதுவிலக்கு வேண்டும் என உறுதியாக இருக்கிறார்கள். கருணாநிதி ஆட்சி அமைத்தவுடன் அதை நிறைவேற்றுவார்.


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அப்போது ஜெயலலிதா நேரில் சென்று சந்திக்கவில்லை. ஆனால், தற்போது தேர்தல் தோல்வி பயத்தால் மக்களை சந்தித்து வருகிறார். இருப்பினும், அவர் மீது மக்கள் கோபத்தில்தான் இருக்கின்றனர். அதை தேர்தலில் காட்டுவார்கள். அந்த கோபத்தால்தான், வாக்கு சேரிக்க செல்லும் அ.தி.மு.க வேட்பாளர்களை தொகுதிக்குள் அனுமதிக்க மக்கள் மறுக்கிறார்கள்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தனது கட்சி வேட்பாளர்களை கண்டபடி தாக்கி வருகிறார். அதேபோல், தங்களையும் தாக்கி விடுவாரோ என்று பயந்துதான், வைகோவும், திருமாவளவனும் தலைப்பாகை அணிந்துள்ளனர். விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வராததால் எங்கள் தலை தப்பியிருக்கிறது'' என்றார்.




No comments:

Post a Comment