
உலக உழைப்பாளிகள் தினமான மே 1 ம் தேதி, (2014) விடிந்தும் விடியாத அந்த காலைப் பொழுதில் பெங்களூரு-குவாஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து நின்றது.
ரயில் வந்த சில நிமிடங்களில் அடுத்தடுத்து எஸ் - 4, எஸ் - 5 ஆகிய 2 ரயில் பெட்டிகளில் குண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி பலியாக, இருபதுக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.
ரயில் வந்த சில நிமிடங்களில் அடுத்தடுத்து எஸ் - 4, எஸ் - 5 ஆகிய 2 ரயில் பெட்டிகளில் குண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி பலியாக, இருபதுக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.
சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் உருண்டோடியும், குற்றவாளிகள் குறித்த தகவல்கள் முழுமை பெறாமல் தான் இருந்தது. ஆனால், இப்போது அதில் ஒரு படி முன்னேற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த வழக்கை தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக (?!) விசாரித்து வந்தனர். சென்ட்ரல் ரயில் நிலைய சம்பவத்தை ஜெராக்ஸ் எடுத்தது போல் பெங்களூரிலும், 2015 டிசம்பரில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதில், சென்னையைச் சேர்ந்த பவானி என்ற பெண் உயிரிழந்தார். இதை கர்நாடகா போலீசார் போன வருடத்திலிருந்து விசாரித்து வந்தனர்.
தமிழக போலீசாரும், கர்நாடக போலீசாரும் குண்டுவெடிப்பு வழக்கில் தாமதம் காட்டுவதாக சுட்டிக் காட்டிய என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அமைப்பு, ' நாங்கள் இதை விசாரிக்கலாமா ?' என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்தது.
என்.ஐ.ஏ.வின் கோரிக்கையை அப்படியே உள்வாங்கிக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழக, கர்நாடக மாநில அரசுகளுக்கு, கடந்த மார்ச் 2016-ல் இதுகுறித்து ஒரு கடிதம் எழுதினார்.
உள்துறை சார்பிலும், '' காந்த்வா சிறையில் இருந்து, 2013 ல் தப்பித்த, 'சிமி' அமைப்பைச் சேர்ந்த விசாரணை கைதிகளுக்கு பெங்களூரு, சென்னை குண்டு வெடிப்புகளில் தொடர்பு இருக்கலாம் " என என்.ஐ.ஏ. சொல்லியிருந்த கருத்தை கோடிட்டு, அதை பரிசீலிக்கும்படி ஒரு கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது.
என்.ஐ.ஏ. சொல்லியிருந்த கருத்தை இருமாநில போலீசாரும் ஏற்கவில்லை. 'மாநிலங்களின் உரிமையில் தலையிடுவதை போல் என்.ஐ.ஏ.வின் கடிதம் உள்ளது. வேண்டுமானால், குண்டு வெடிப்பு உள்ளிட்ட தீவிரவாத செயல்கள் குறித்த விசாரணையை, மாநில அரசுகளுடன் இணைந்து என்.ஐ.ஏ. விசாரிக்கும் வகையில், மாநிலந்தோறும் ஒரு மையத்தை ஏற்படுத்தலாமே' என்று போலீஸ் தரப்பில் ஆலோசனையே பதிலாகக் கொடுக்கப் பட்டது.
என்.ஐ.ஏ.வும் அசரவில்லை. 'இது குறித்த விசாரணையை, நாங்களே விசாரிக்க அனுமதிக்க வேண்டும்' என மத்திய அரசை, மீண்டும் பேக்ஸ், மெயில்களில் வலியுறுத்த ஆரம்பித்தது.
இப்படியாக இந்த கண்ணாமூச்சு ரே... ரே... போய்க் கொண்டிருக்கும் போதே, சைலண்ட்டாக சென்னை, பெங்களூருவில் குண்டு வெடித்த ஸ்பாட்டுகளை நேரில் ஒரே ஒருநாள் பார்வையிட்டு விட்டு கிளம்பியது என்.ஐ.ஏ. பிறகு இந்த வழக்குக்கான ஆதாரங்களை திரட்டத் தொடங்கியது.
இந்நிலையில்தான், சில நாட்கள் முன்பு ஒடிசாவின் ரூர்கேலாவில், சிமி இயக்கத்தை சேர்ந்த 4 பேரிடம் அம்மாநில போலீஸார் விசாரணை மேற் கொண்டனர் . ( ஒடிசாவில் அவர்களைப் பிடித்தது என்.ஐ.ஏ.வின் ஸ்பெஷல் டீம்தான் என்ற உள்குத்து விவகாரம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது)
பிடிபட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தில், ''சென்னை சென்ட்ரல், பெங்களூரு-குண்டு வெடிப்பை செய்தது நாங்கள்தான் '' என்று ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை விசாரணைக்காக , போலீசார் சென்னைக்கு அழைத்து வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து காவல் வட்டாரத்தில் சீனியர் அதிகாரி ஒருவரிடம் பேசியதில், " மத்திய பிரதேசத்தின் பா.ஜ.க. லீடர் ஒருவரை 2009-ல் கொலை செய்த வழக்கு, ஆந்திராவில் போலீசாரைக் கொன்ற வழக்கு என பல வழக்குகளில் தொடர்புடைய டீம் இது.
ஒடிசாவில் 45 லட்ச ரூபாயை வங்கியில் கொள்ளையடித்த வழக்கில் சிக்கிதான் இவர்கள் ஒடிசா சிறையில் இருக்கின்றனர். இவர்களின் டீமில் முகமது அஸ்லாம் என்கிற பிலால், முகம்மது ஹைதாஜூதீன் ஆகியோர், போலீஸ் என் -கவுண்ட்டரில் ஏற்கனவே இறந்து விட்டனர். இப்போது சிறையிலிருக்கும் அம்ஜத்கான், ஜாகீர் உசேன், மெகபூப்ஹுட் ஆகிய மூவர்தான் பெங்களூரு, சென்னை குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய குற்றவாளிகள் என்று என். ஐ. ஏ. தான் ஸ்மெல் செய்தது. அதன்படிதான் எங்கள் போலீஸ் பிடித்தது.
வீம்புக்காக இப்படிப்பட்ட வழக்குகளை ஆண்டுக் கணக்கில் கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந் திருப்பதால்தான் அடுத்தடுத்து தீவிரவாத செயல்கள் சாதாரணமாக நடக்கிறது. அப்போது பழைய குண்டுவெடிப்பு வழக்கை கிடப்பில் போட்டு விட்டு, புதிய குண்டு வெடிப்பு வழக்கை கையில் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்பது போலத்தான் இப்போது கதையே போகிறது.
இப்போது தேர்தல் நேரம் என்பதால், இந்த தீவிரவாத டீமை உடனே சென்னைக்கு கொண்டு வர முடிய வில்லை. குறைந்த பட்சம் 150 முதல் 200 போலீசாரை சென்னையில் இருந்து ஒடிசாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
அங்கிருந்து திரும்பும் போது, ரயிலின் மூன்று கம்பார்ட்மென்ட் முழுவதும் எங்கள் போலீசை மட்டுமே 'கன்' னுடன் ஏற்றிக் கொண்டு, அங்கிருந்து பக்காவாக அக்யூஸ்ட்டை ' லாக்' பண்ணி இங்கு கொண்டுவர வேண்டும்.
சென்னையில் ஹெட்- குவார்ட்டர் ஏரியாவுக்குள் எங்கள் வேன் நுழையும் கடைசி நிமிஷம் வரை நாங்கள் ஃப்ரீசரிலேயே படுத்துக் கிடந்தாலும் புழுக்கம்தான், வியர்வை நடுக்கம்தான்... இது லேசான வேலையல்ல" என்று நொந்து கொண்டார் அவர்.

No comments:
Post a Comment