Monetize Your Website or Blog

Monday, 2 May 2016

அறிவியல் ஆய்விற்காக உயிரைப் பணயம் வைத்த இயற்பியல் அறிஞர்!

காற்றை விட நீரின் அடர்த்தி அதிகம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். அதற் குக் காரணம் நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று நெருங்கி இருப்பதே ஆகும். இதனால் நீரினை ஊடுருவிக் கடந்து செல்வது எந்த ஒரு பொருளுக்கும் கடினமானதே. இந்தத் தன்மையின் வீரியத்தை விளக்க ஒரு இயற்பியல் அறிஞர் செய்த ஆய்வு அதிர்ச்சிகரமானது. 


ஆன்ட்ரியாஸ்  வாள்  (Andreas Wahl)  எனும் அந்த இயற்பியலாளர் நீச்சல் குளத்தில் இறங்கி தனது நெஞ்சிற்கு நேரே துப்பாக்கியை வைத்து வெடிக்கச் செய்கிறார். தரையில் வெடிப்பதைப் போன்றே பேரொலியுடன் துப்பாக்கி வெடித்தாலும் தோட்டாவானது நீரை ஊடுருவி செல்ல இயலாமல் வேகம் குறைந்து சிறு தொலைவிலேயே நின்று குளத்தடியில் சென்று விழுகிறது. இக்காட்சியை அதிவிரைவு கேமராவில் தெளிவாய் பதிவு செய்துள்ளனர். இதனை வேகத்தைக் குறைத்துப் பார்க்கையில் வியப்பாய் உள்ளது.

   

இது மட்டும் இன்றி பொருட்கள் மையப் புள்ளியை (central point) அணுகும் போது வேகமாகச் சுழலும் என்னும் விதியை மட்டுமே நம்பி வேறு எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி 14 மீட்டர் உயரத்தில் இருந்து குதிக்கிறார்.



No comments:

Post a Comment