Monetize Your Website or Blog

Monday, 2 May 2016

திருத்தப்படுகிறதா அதிமுக தேர்தல் அறிக்கை ? - திடீர் முடிவின் பரபர பின்னணி!


திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கும் 'பென்ஷன் ஸ்கீம்' அதிமுக கூடாரத்திலேயே வியந்து ரசிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து,  ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த தேர்தல் அறிக்கையில் பல புதிய மாற்றங்களை செய்யும் வேலை கடந்த பத்து நாட்களாக  கார்டனில் சீரியசாக நடந்து வருகிறது என்கிறார்கள்.

பிரசாரத்துக்குப் போகிற பத்து பாய்ன்ட்டுகளில் ஐந்திலாவது,  'இந்த தேர்தலின் கதாநாயகன், திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ' என்று மறக்காமல் சொல்லி வருகிறார், மு.க.ஸ்டாலின்.
ஸ்டாலினின் விடாத இந்த பன்ச் அதிமுகவை மட்டுமல்ல, பாஜக போன்ற கட்சிகளையும் கிளப்பி விட்டிருக்கிறது. குறிப்பிட்ட இந்த பன்ச் டயலாக் குறித்து பல இடங்களில் பாஜகவின் தமிழிசை, விடாமல் கவுன்ட்டர் கொடுத்து வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில்தான் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் பல விஷயங்கள் குறித்து நமக்குத் தகவல் கிடைத்தன.

" அரசு சார்பில் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ் (சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது), அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கைம்பெண், முதியோர் உதவித்தொகை இரட்டிப்பு,  மருத்துவ காப்புறுதி திட்டத்துக்கான உதவிப் பணம் ரூ.25 ஆயிரத்திலிருந்து 4 லட்ச ரூபாயாக உயர்வு. (சிகிச்சையோடு மருந்துகளும் பெறலாம்), சிறு குறு விவசாயிகளின் கடன்கள்  மொத்தமும் தள்ளுபடி,  வீடுகளுக்கு இலவச அரசு கேபிள், முன்னர் நடைமுறையில் இருந்த அதே பென்ஷன் ஸ்கீம் மீண்டும் செயலாக்கத்துக்கு கொண்டு வரப்படும்.
அரசு சார்பில் இலவச வேட்டி- சேலையுடன் பொங்கல் பரிசாக  வழங்கப்படும் ரூ.500, இனிமேல் ஆயிரம் ரூபாயாக  உயர்த்தி வழங்கப்படும்" என்பது உள்ளிட்ட பல புதிய அம்சங்களுடன் மே மாத துவக்கத்தில்    தனது தேர்தல் அறிக்கையை  அதிமுக,  வெளியிட உள்ளதுதான்  தமிழக அரசியல் ஏரியாவில்  தற்போது ஹை லைட்டாக பேசப்படும் மேட்டர்...



No comments:

Post a Comment