துபாய் விமான விபத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட 300 பேரைக் காப்பாற்றி, உயிரிழந்த அமீரகத் தீயணைப்புப் படை வீரர் ஜாசிம் இஸ்ஸா அல் பலுசிக்கு, திருச்சூர் தீயணைப்பு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானத்தில் 20 நாடுகளைச் சேர்ந்த 282 பயணிகள் ஊழியர்கள் என 300 பேர் இருந்தனர். பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள். கேரளத்திலிருந்து ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிந்து வரும் இவர்கள் குடும்பத்துடன் அந்த விமானத்தில் பயணித்தனர். துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, அந்த விமானம் திடீரென்று தீ பிடித்தது.
தீயணைப்பு வண்டிகள், கொழுந்துவிட்டு எறிந்து கொண்டிருந்த விமானத்தை நோக்கி விரைந்தன. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. விமானத்தின் அத்தனை அவசரக் கதவுகளும் உடனடியாகத் திறக்கப்பட்டு பயணிகளை வெளியேற்றும் முயற்சி நடந்தது. மள மளவென நடந்த மீட்புப் பணியில் அத்தனைப் பயணிகளும் விமானத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.

எனினும் 13 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஒரு உயிரிழப்புகூட ஏற்படாமல், அத்தனை பயணிகளையும் தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஆனால், விமானப்பயணிகளை காப்பாற்றும் முயற்சியில், ஜாசிம் இஸ்ஸா அல் பாலுசி என்ற தீயணைப்புப் படை வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் தீயணைப்புப் படை வீரர் உயிரிழந்தது பொது மக்கள் மத்தியில் உருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலோனார் கேரளத்தை சேர்ந்தவர்கள். இதனால் கேரளத்தில் உள்ள திருச்சூர் நகர தீயணைப்பு அலுவலகத்தில் பலுசிக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அலுவலகத்தின் முகப்பு பகுதியில், அவரது புகைப்படத்துடன் கூடிய பேனர் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
அதில், ''துபாய் விமான நிலையத்தில் பயணிகளை மீட்கும் பொருட்டு உயிரைத் தியாகம் செய்த தீயணைப்பு வீரருக்கு அஞ்சலி செலுத்துகிறோம்'' என மலையாளத்தில் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சூர் தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''தீயணைப்புப் பணியில் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதற்கு அல்பலுசியின் தியாகமே எடுத்துக்காட்டு" என்றனர்.
கடமை உணர்வும், உயிர்த் தியாகமும் நாடு கடந்தும் மதிக்கப்படுபவை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு!
கடமை உணர்வும், உயிர்த் தியாகமும் நாடு கடந்தும் மதிக்கப்படுபவை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு!

No comments:
Post a Comment