Monetize Your Website or Blog

Monday, 8 August 2016

சாகச நிகழ்ச்சி... பாராசூட்டில் இருந்து தவறி விழுந்த தொழிலதிபர் பலி!


பாரா சைலிங் சாகசத்தில் ஈடுபட்ட கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், பாராசூட்டில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வெள்ளி விழாவினை முன்னிட்டு, இந்தியன் ஏரோ ஸ்போர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பின் சார்பில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாரா சைலிங் எனும் சாகச நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது.



தமிழக கடலோரப்படை டி.ஜி.பி. சைலேந்திர பாபு துவக்கி வைத்த இந்த நிகழ்ச்சியில், பாரா சைலிங்கில் ஆர்வம் கொண்டவர்கள் பங்கேற்று வந்தனர். இந்நிலையில் இன்று கலை கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்த 53 வயது மல்லேஸ்வர ராவ் என்ற ஃபவுண்டரி தொழிலதிபர், பாரா சைலிங் சாகச நிகழ்வில் பங்கேற்றார்.

பாராசூட்டில் சுமார் 60 அடி உயரத்தில் மல்லேஸ்வர ராவ் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பாராசூட்டில் பொருத்தப்பட்ட பெல்ட், சரியாக பொருத்தப்படாமல் இருந்ததால் தான் அவர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

பாராசூட்டில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த மல்லேஸ்வர ராவ் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கோவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாகச நிகழ்ச்சியின்போது, பாராசூட்டில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



No comments:

Post a Comment