தேன்.. இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் எத்தனையோ அருட் கொடைகளில் ஒன்று. மருந்தாக, உணவாக, பூஜைக்காக, பிரசாதமாக, அழகுப் பொருளாக.. என இதன் பயன்பாடுகளை, சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இன்றைக்கு சுத்தமான தேன் கிடைப்பதுதான், கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.
யாருக்கு தேன் தேவைப்பட்டாலும்.. “சுத்தமான (கலப்பிடமில்லாத) தேன் எங்கு கிடைக்கும்? என்பதாகத்தான் அவர்களுடைய கேள்வி இரு்ககிறது. ஆம். அந்தளவுக்கு இதில் கலப்படம் நிறைந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே.. தட்டுப்பாடுதான்!
தேவை இருக்கும் பொருளுக்குத்தானே மரியாதையும் அதிகம். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும், சுத்தமான தேனை உற்பத்தி செய்து, நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், செஞ்சேரி மலையை அடுத்துள்ள மந்திரிப்பாளையம் கிராமத்தைச் சோந்த திருஞானசம்பந்தம். இவருடைய குடும்பம், கடந்த மூன்று தலைமுறையாக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறது!
பருத்தி விவசாயியின் வெகுமதி!
எங்க அப்பாவோட தாத்தா பேரு கந்தசாமி. வெள்ளைக்காரன் காலத்தில் இவர், பருத்தி வியாபாரி. ஊர் ஊராக சென்று, விவசாயிகளிடம் பருத்தியை கொள்முதல் செய்யும் போது பல்லடம் பக்கத்தில் ஒரு விவசாயி, பருத்திக் காட்டில் பெட்டிகளை வைத்து, தேன் சேகரித்து கொண்டிருந்ததைப் பார்த்திருக்கார். அதில் ஆர்வமாகி, அவரிடமிருந்து ஒரு பெட்டியை வாங்கி கொண்டு வந்து, எங்கள் தோட்டத்தில் வைத்திருக்கார். அதில் நன்றாக தேன் கிடைக்கவும், நிறைய பெட்டிகளை வைத்து, தேனை சேகரித்து விற்க ஆரம்பித்திருக்கார். ஒரு கட்டத்தில் நல்ல வருமானம் கிடைத்ததால், பருத்தி வியாபாரத்தை கைகழுவிவிட்டு, முழுநேரமாக தேனீ வளர்ப்பில் இறங்கிவிட்டார்.
‘நல்ல வருமானம் கிடைக்கும் தேனீ வளர்ப்புத் தொழில் தன்னுடையே போய்விடக் கூடாது என்று மகள் வழி பேரனான என் அப்பா வேலுச்சாமியையும் பழக்கப்படுத்திட்டார். எங்க அப்பா, இன்றைக்கு வரைக்கும் தேனீ வளர்த்து, வருமானம் பார்த்திட்டிருக்கார். இப்போ நானும், இதில் இறங்கிவிட்டேன்.
வழிகாட்டிய வானொலி!
ஆரம்பத்தில் அப்பாவும், நானும் எங்களுக்குத் தெரிந்த அளவுக்கு தேனீ வளர்த்து கொண்டிருந்தோம். 95-ம் வருடம் ‘ஆல் இன்டியா ரேடியோவில்” தேனீ வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பற்றி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பூச்சியியல் துறை பேராசிரியர், முத்துராமன் பேசினார். நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டதும், எனக்கு ஆர்வம் அதிகமாகி… அடுத்த நாளே அவரை சென்று பார்த்தேன். நிறைய சந்தேகங்களைத் தீர்த்து வைத்து… அடுக்குத் தேனீ வளர்ப்பில் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்து முறையும் சொல்லிக் கொடுத்தார். அதன்பிறகு, பல்கலைக் கழகத்தில் தேனீ வளர்ப்புப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து… செயற்கை முறையில் ராணித் தேனீயை உருவாக்கும் சூட்சமத்தைக் கற்று கொண்டேன். எட்டாம் வகுப்புகூட தாண்டாதவன் நான். இப்போது, என் தோட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் வந்து, தேனீ வளாப்புப் பயிற்சியை எடுத்துச் செல்கிறார்கள்.
தேனீ வளர்ப்பில் பல நுட்பங்களைத் தெரிந்து கொண்ட பிறகு, வழக்கமாக செய்து கொண்டிருந்த அடுக்குத் தேனீ வளர்ப்பை விட்டுவிட்டு.. அதிக மகசூல் கொடுக்கும் இத்தாலியத் தேனீக்களை வளர்க்க ஆரம்பித்தேன். இப்போது, நானே, ராணித் தேனீக்களை உருவாக்கி, புது காலனிகளை ஏராளமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். அதே மாதிரி, வழக்கமாக புகை போட்டுத்தான் தேன் எடுப்பாங்க. நான் புகை இல்லாமல் தேன் எடுக்கும் மாதிரி, சின்னதாக ஒரு கருவியை உருவாக்கியிருக்கிறேன். அதன் மூலமாக, ஈக்களுக்கு பாதிப்பில்லாமல், தேனை எடுக்க முடிகிறது.
பத்தடி இடைவெளி
3 ஆயிரம் தேனீக்களை உள்ளடக்கிய இத்தாலியத் தேனீப் பெட்டி ஒன்றின் விலை 6 ஆயிரத்து 500 ரூபாய். இதை பூக்கள் அதிகம் உள்ள தோட்டங்களில், நிழலன இடங்களில் ஒன்றரை அடி உயரத்தில் வைக்க வேண்டும். இதற்காக பிரத்யேக ‘ஸ்டாண்டுகள் உண்டு. ஒரு பெட்டிக்கும் அடுத்தப் பெட்டிக்கும் 10 அடி இடைவெளி இருக்க வேண்டும். பெட்டியில், எறும்பு பல்லி போன்றவை ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெட்டியை வைத்ததிலிருந்து 130 நாட்களில் 3 ஆயிரம் தேனீக்கள் 12 ஆயிரம் தேனீக்களாகப் பெருகிவிடும். இந்தக் காலகட்டத்திற்கு பிறகு தேனை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையிலிருந்து, 15 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்யலாம்.
ஒவ்வொரு முறை சேகரிக்கும் போதும், 2 கிலோ அளவிற்க்குக் குறையாமல் தேன் கிடைக்கும். பெட்டியில் தேனீக்கள் பெருகிய பிறகு, அதிலிருந்து நாமே அடுத்த பெட்டியை உருவாக்கிக் கொள்ளலாம். தேனீக்கள் இல்லாத காலி பெட்டி 2 ஆயிரத்து 500 ரூபாய் விலையில் கிடைக்கிறது. ஒரு பெட்டியிலிருந்து மாதம் சராசரியாக 4 கிலோ அளவிற்கு தேன் கிடைக்கும். பெட்டியை ஒரே இடத்தில் வைத்திருந்தால், பெரியளவில் லாபம் பார்க்க முடியாது.

பொதுவாக தேனீ வளர்த்தால், ஆண்டு முழுவதும் தேன் கிடைக்காது என்று சொல்வார்கள். காரணம், தேனீக்களுக்கு வேண்டிய பூக்கள் அங்கு தொடர்ந்து இருக்காது. அதனால்தான் தொடர்ந்து தேன் எடுக்க முடியாமல் போகிறது.
ஒவ்வொரு பருவத்திலும் எந்தெந்தப் பகுதியில் பூக்கள் அதிகமாகப் பூக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த இடங்களில் பெட்டிகளைக் கொண்டு போய் வைக்க வேண்டும். அப்போதுதான் ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கும்.
முருங்கை தேனுக்கு கூடுதல் விலை!
நான் எங்கள் ஊரிலிருந்து 150 கிலோ மீட்டர் தூரம் வரை பெட்டிகளைக் கொண்டு போய் வைக்கிறேன். முருங்கை, கொத்தமல்லி, கடுகு, சூரியகாந்தி, பந்தல் பயிர்கள், தென்னை மாதிரியான பயிர்களில் அதிக தேன் கிடைக்கும். அந்த தோட்டங்களில் அதிக தேன் கிடைக்கும். அந்த தோட்டங்களில் பெட்டிகளை வைக்கும் போது, அந்தப் பயிர்களுடைய மகசூலும் கூடுகிறது. அதனால், விவசாயிகள் அவங்க தோட்டத்தில் பெட்டி வைப்பதற்கு ஒத்துழைக்கிறார்கள்.
அரவக்குறிச்சி, மூலனூர் பகுதிகளில் நூற்றுகணக்கான ஏக்கரில் செடிமுருங்கை விவசாயம் நடக்கிறது. அந்த பகுதிகளில் எப்பவுமே அதிக அளவில் தேன் கிடைக்கும். அதனால் அந்தப் பகுதிகளில் பெட்டிகளை வைத்திருக்கிறேன். முருங்கைத் தேன் கெட்டியாகவும் சுவையாகவும் இருப்பதால், அதற்கு கிராக்கியும் அதிகம். உடுமலைப் பேட்டை, பல்லடம் பகுதிளில், வருடம் ஒரு போகம் மானாவாரியாக நாட்டுக் கொத்தமல்லி விதைப்பாங்க. அது பூவெடுக்கும் போது இந்தப் பகுதிகளில் பெட்டிகளை வைத்திடுவேன். பொங்கலூர், சுல்தான் பேட்டை பகுதிளில் வெங்காய சாகுபடி அதிகம். இந்த பகுதிகளிலும் பூவெடுக்கும் பருவத்தில் பெட்டிகளை வைத்திடுவேன்.
மாத வருமானம் 1 லட்சம்
ஒரு பெட்டியிலிருந்து மாதம் சராசரியாக 5 கிலோ தேன் கிடைக்கும். 130 பெட்டிகள் மூலமாக, மாதத்திற்கு சராசரியாக 5 ஆயிரம் கிலோ அளவிற்கு தேன் உற்பத்தி செய்கிறேன். முருங்கைத் தேன் கிலோ 500 ரூபாய்க்கும், மற்ற தேன் கிலோ 250 ரூபாய்க்கும் விலை போகிறது. 6,500 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்த இத்தாலியத் தேனீ வளர்ப்பு மூலமாக இப்போது மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறேன் என்றார்.
தேனீக்களை போல் நாமும் சுறுசுறுப்பாக இருந்தால்தான் இந்த தொழிலில் லாபம் பார்க்க முடியும். பெட்டியை வைத்துவிட்டு சும்மா உட்கார்ந்திருந்தால் பல நேரங்களில் முதலுக்கே மோசம் வந்துவிடும் என்றார்.
தொடர்புக்கு
ம.வே.திருஞானசம்பந்தம், செல்போன் : 99762 63519
இரா.பிலிப்தர், செல்போன் :94429 18685

No comments:
Post a Comment