Monetize Your Website or Blog

Monday, 21 March 2016

ஐஎஸ் தீவிரவாதிகளால் பந்தாடப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை!

ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பெண்கள் அனுபவிக்கும் இன்னல்கள் தொடர்பான அதிர்ச்சி தகவலை யாஸிதியின பெண் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். 

ஐ.எஸ். அமைப்பினர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக சமீப காலமாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக யாஸிதியினத்தை சேர்ந்த ஆண்களை கொலை செய்தும், பெண்களை பாலியல் அடிமைகளாகவும் ஐ.எஸ். அமைப்பினர் பயன்படுத்தி வருகின்றனர்.
 

இந்நிலையில் ஐ.எஸ். அமைப்பினரால் கலிதா என்ற யாஸிதி இன பெண் அனுபவித்த துன்பங்கள் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து கலிதா கூறுகையில், "என்னை கடத்திய தீவிரவாதிகள் ரசாக் பகுதிக்கு அழைத்து சென்றனர். மீன் சந்தையில் விற்பனை செய்வது போன்று அங்கு பெண்களை விற்பனை செய்தனர். சாதாரண மொபைல் போனுக்காக கூட அவர்கள் பெண்களை விற்பனை செய்தனர். மேலும் அழகான பெண்களை விஜபி அறையில் அடைத்து வைப்பார்கள்.

ஐ.எஸ். அமைப்பின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் அந்த பெண்களை தங்களது தேவைகளுக்கு பயன்படுத்திகொள்வார்கள். என்னை விலைக்கு வாங்கிய வயதான முதியவர் ஒருவர் தினமும் பாலியல் பலாத்காரம் செய்வார். மேலும் தனது கணவரை மயக்கியதாக கூறி அவரது மனைவி தினமும் என்னை அடிப்பார். தினமும் மூன்று வேளை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளேன். இது வரை எட்டுபேரிடம் நான் விற்கப்பட்டுள்ளேன்.

என்னை கடைசியாக நாசர் என்பவர் விலைக்கு வாங்கினார். பல முறை தற்கொலைக்கு கூட முயன்றுள்ளேன். எனினும் நடக்கவில்லை. இந்நிலையில் எனது கையில் பச்சை குத்தியிருக்கிற தந்தையின் பெயரை வைத்து என் குடும்பத்தினர் என்னை அடையாளம் கண்டுகொண்டனர். பின்னர் எனது குடும்பத்தினரிடமே 24 ஆயிரம் டாலர்களுக்கு என்னை விற்றனர் என்று தெரிவித்துள்ளார்.

சிறுவயதில் பள்ளிக்கு செல்ல ஆசைப்பட்டேன் ஆனால் இயலவில்லை. எனவே தற்போது வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது கனவு" என்று கூறியுள்ளார்.



No comments:

Post a Comment