Monetize Your Website or Blog

Tuesday, 29 March 2016

கம்யூனிஸ்டுகளை கதிகலங்க வைக்கும் இப்படியொரு பேச்சு- இவர்தான் அந்த வேட்பாளர்!

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் மே 16ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதுவரையிலும் கேரள சட்டப்பேரவையில் இடம் பிடிக்காத பாரதிய ஜனதா இந்த முறை தனது கணக்கை தொடங்கி விட வேண்டும் என்கிற முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
கேரள சட்டப்பேரவை தேர்தலில், பா.ஜனதா தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் பி.சி.தாமஸ் தலைமையிலான கேரள காங்கிரஸ் அங்கம் வகித்து வந்த நிலையில், ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் சார்பில் சமீபத்தில் தொடங்கப்பட்ட பாரத் தர்மா ஜனசேவா அமைப்பும் இந்த கூட்டணியில் இணைந்து உள்ளது. இதனால், கேரளாவில் 20 சதவிகிதம் உள்ள ஈழவா சமூகத்தினரின் வாக்குகள் இந்த கூட்டணிக்கு கிடைக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.


இந்த நிலையில், இஸ்லாமிய சமூகத்தினரையும் கவரும் திட்டங்களையும் பா.ஜனதாக கூட்டணி முன்னெடுத்து இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலப்புறம் மாவட்டத்தில் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. கேரளாவில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் மலப்புறம் தொகுதியின் பா.ஜனதா வேட்பாளராக பனகாட் செய்யது பாதுஷா தாங்கல் என்பவர் களம் இறக்கப்பட்டு இருக்கிறார். மலப்புறம் பகுதியில் ‘தாங்கல்’ என்ற இறைத்தூதர் வாழ்ந்துள்ளார். அவரது வம்சாவளியினர் மட்டுமே இந்தப்குதியில் வெற்றி வாய்ப்பை பெறமுடியும் என்பதே நிலை. அதனால் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவரான பன்காட் செய்யது ஹைதரலி சாஹிப் தாங்கல், சுட்டிக் காட்டும் நபரே இந்தத் தொகுதியில் வெற்றி பெற முடியும். ஆனால், அதனை மீறி அதே குடும்பத்தை சேர்ந்த பாதுஷா தாங்கல், கோதாவில் குதித்து இருப்பதால் மலப்புறம் தொகுதியின் தேர்தல் களம் சூடிபிடிக்க தொடங்கி உள்ளது. மலப்புறம் தொகுதியில் போட்டியிடும் பாதுஷா தாங்கலின் பிரச்சாரம் செம ஹாட் டாபிக்காக உள்ளது. அவரது பேச்சு சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
பிரச்சாரத்தின் போது அவர் பேசுகையில், "நமது நாட்டைக் காக்கும் பணியில் ராஷ்டிரிய சுயம் சேவக் தொண்டர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் நமது மண்ணை தாயாக போற்றுபவர்கள். ஆனால், கம்யூனிஸ்டுகள் தீவிரவாதத்தையும் பிரிவினையையும் தூண்டுபவர்கள். சி.பி.எம்-மின் வரலாறு மிக மோசமானதாகவே இருக்கிறது. நாட்டை அண்ணியரிடம் இருந்து மீட்கும் பணிக்காக இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து 1942ல் ஜப்பானுடன் இணைந்து போரில் ஈடுபட்ட சுபாஷ் சந்திரபோஸை ஏற்றுக் கொள்ளாதவர்கள், 1947 ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் கிடைத்த போது ஆகஸ்ட் 15ஐ ஆபத்து 15 என்று கருப்புநாளாக அறிவித்தவர்கள், நாராயண குருவை திட்டி தீர்த்தவர்கள் மட்டும் அல்லாமல் விவேகானந்தரை, காவி உடுத்திய பூர்ஷ்வா என பேசியவர்கள்.

ஆனால், ஒசாமா பின்லேடனுக்காக ஹர்த்தால் நடத்தியவர்கள். சதாம் உசேனுக்காக நெஞ்சம் பிடித்துக் கொண்டு நிலைகுலைந்தவர்கள் சி.பி.எம்-காரர்கள். அப்சல்குருவுக்காகவும் கன்ஹையா குமாருக்காகவும் ஆதரவு கொடுப்பதில் ஆச்சர்யம் இல்லை. நமக்கு வேண்டியது யாக்கோபு மேனன் அல்லது அப்சல்குருவின் சிந்தனைகள் அல்ல. அவர்கள் இந்த நாட்டுக்காக என்ன செய்தார்கள்? 1993ல் மும்பையில் 13 இடத்தில் குண்டு வைத்து 257 இந்தியரை கொன்றவன் யாக்கோபு மேனன். பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தி 7 பாதுகாப்புப் படையினரை கொன்றவன் அப்சல்குரு. அவர்களை ஆதரிக்கும் கன்ஹையா குமாருக்கு சி.பி.எம் ஆதரவு கொடுப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. நமது சந்ததியினருக்கு சரியாக புரிதலை கற்றுக் கொடுக்கவில்லை. நாட்டை அடிமைப்படுத்திய அக்பரை பற்றி படிப்பவர்களுக்கு நாட்டுக்காக போராடிய ராணா பிரதாப்சிங் பற்றி கற்றுக் கொடுப்பதில்லை. ஒளரங்கசீப் பற்றி படிப்பவர்களுக்கு வீர சிவாஜியை கற்றுத் தருவதில்லை. நாட்டை அடிமைப்படுத்தியவர்களை ஹீரோக்களாக படிக்கும் நாம், நாட்டுக்காக தியாகம் செய்தவர்களை தெரிந்து வைத்திருப்பதில்லை.
அயோத்தி பிரச்னையை பூதாகரமாக்கி இரு சமுதாயத்தினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு சி.பி.எம்-முக்கும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்குக்கும் இருக்கிறது" என்கிற ரீதியில் அவர் பேசும் பேச்சு அரசியல் சூட்டை கிளப்பி இருக்கிறது. 

மேலும் அவர் பேசுகையில், "பிரதமர் மோடி மீதுள்ள நம்பிக்கை காரணமாக கடந்த 2012ல் நான் பா.ஜ.க.வில் சேர்ந்தேன். என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு மலப்புறம் ஜில்லா துணைத் தலைவர் பொறுப்பை கொடுத்த கட்சியானது, இப்போது மலப்புறம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் கொடுத்திருக்கு. என்னைப் போன்ற கருத்து கொண்ட பல நண்பர்கள் எனக்கு ஆதரவு தெரிவிச்சு இருக்காங்க. பல சங்கங்கள் என்னை ஆதரிப்பதாக சொல்லியிருக்கு. தேச பக்தியும் ஒழுக்கமும் கொண்ட பா.ஜ.க.வின் ஆட்சி கேரளாவுக்கு தற்போதைய தேவை. அதற்காக தொடர்ந்து பாடுபடுவேன். மக்கள் ஆதரவு எனக்கு கிடைக்கும்" என்கிறார் உற்சாகமாக.

தேர்தல் முடிவதற்கு இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் நடக்கப் போகுதோ?! 


No comments:

Post a Comment