Monetize Your Website or Blog

Friday, 25 March 2016

அமெரிக்காவின் பெடெரல் ரிசர்வ் வங்கியும்... கச்சா எண்ணெயும்...!

எதிர்பார்த்த மாதிரியே அமெரிக்காவின் பெடெரல் ரிசர்வ் வங்கி தற்பொழுதுள்ள 0.25 சதவிகிதத்திலிருந்து 0.5 சதவிகிதத்திலிருக்கும் வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. நிலையற்ற உலக பொருளாதார சூழ்நிலையின் மற்றும் நலிவடைந்த பணவீக்கத்தின் காரணத்தினாலும் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று தெரிவித்திருக்கிறது.


 

வட்டி விகிதம் அதிகரிக்காத காரணத்தினால் பெரும்பாலான உலக பங்கு சந்தைகள் கடந்த வியாழக்கிழமைகளிருந்து உயர்ந்திருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி கடந்த 2015 ஆம் வருட கடைசியில் வட்டிவிகிதத்தை 2016 ஆம் ஆண்டில் நான்கு முறை உயர்த்தலாம் என்ற திட்டம் உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. ஆனால் தற்பொழுது அமெரிக்க மத்திய வங்கி இந்த வருடத்தில் இரண்டுமுறை தான் வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பிருப்பிகிறது என்று அறிவித்ததால் அதன் திட்டம் குறைத்திருக்கிறது.


2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மத்தியில் சவூதி அரேபியா மற்றும் சக ஒபெக் [(The Organization of Petroleum Exporting Countries (OPEC)] உறுப்பினர்களான கத்தார் மற்றும் வெனிசுலா ஒபெக் அமைப்பில் இடம்ப்பெறாத நாடான ரஷ்யவுடன், மற்ற எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் இசைந்தால், எண்ணெய் உற்பத்தியை மேலும் அதிகரிக்காமல் 2016 ஜனவரி மாத அளவிலேயே வைத்திருப்பாதாக ஒப்பந்தம் செய்து கொண்டது.

அந்த ஒப்பந்தத்திலிருந்தும் கட்ச எண்ணெய் உற்பத்தி செய்யும் அமெரிக்க மற்றும் இதர உலக நாடுகளின் எண்ணெய் கிணறுகள் குறைந்தலிருந்தும் கட்சா எண்ணெயின் விலை நிலைப்பட்டு மெதுவாக உயர்ந்து கொண்டே வந்தது.

உலக கட்சா எண்ணெய் உற்பத்தி ஒபெக் மற்றும் ஒபெக் அமைப்பில் இடம் பெறாத நாடுகளின் உற்பத்தியை மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்க்கான கூட்டத்தை 2016 ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி என்று சமீபத்தில் அறிவித்ததிலிருந்து கட்சா எண்ணெய் மேலும் அதிகரித்தது. 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தோரயமாக 26 டாலராக இருந்த கட்சா எண்ணெயின் விலை 40% உயர்ந்து தற்பொழுது கிட்டத்தட்ட 40 டாலர் என்ற அளவில் உள்ளது.
ஈரான் தற்பொழுதுள்ள எண்ணெய்  உற்பத்தியான நாள் ஒன்றுக்கு 3.2 மில்லியன் பீப்பாய்களில் இருந்து, நாள் ஒன்றுக்கு நான்கு மில்லியன் பீப்பாய்களாக அடையும் வரை உற்பத்தியை மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்க்கான கூட்டத்தில் கலந்து கொள்வதை பரிசீலிக்க முடியாது என்று கூறியிருக்கிறது. 


மேலே கூறியிருக்கும் பெரும்பாலான செயல்கள் பண புழக்கத்தை பெருக்கும், எண்ணெய் உற்பத்தியை அதன் விநியோகத்தையும் குறைக்கும் நடவடிக்கைகளாகவே  இருக்கிறது.

அதனால் பங்கு மற்றும் சரக்குகளின் சந்தைகளில் குறுகிய கால உயர்வை தான்  காண வாய்ப்பிருகிறது. பொருட்கள் மற்றும் சரகுக்களின் தேவைகளை அதிகரிப்பதற்கான  நடவடிக்கைகளாக இருந்தால் தான் உலக பொருளாதாரம், பங்கு மற்றும் சரக்குகளின் சந்தைகளில் நீண்ட கால மற்றும் ஆரோக்கியமான முன்னேற்றம் காணலாம்.

No comments:

Post a Comment