கனவு காணுங்கள், அப்போதுதான் கனவினை வாழ்ந்திட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கென்யாவை சேர்ந்த சீவ்லின் கேட்ஸ் எனும் பெண் தனது கனவை வாழ்ந்திட வித்தியாசமக யோசித்ததால் அவரது கனவு நிஜமாகிவிட்டது.

ஆம், கென்யாவின் நைரோபியில் வாழ்ந்து வரும் விவசாயின் மகளான சீவ்லினுக்கு ஒரு கனவு இருந்தது அது, சீனாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்பதுதான். பொருளாதாரம் காரணமாக தனது இந்தக் கனவை நிறைவேற்ற முடியாத சீவ்லின், அவரது நண்பரின் உதவியோடு தனது படத்தை, சீனாவில் இருப்பதுபோல ஃபோடோ ஷாப் செய்து அவற்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

"நான் சீனாவுக்கு கிளம்பிவிட்டேன்" என்று, கென்ய விமானம் முன் நின்றபடி ஃபோட்டோ ஷாப் செய்த படத்தை ஃபேஸ்புக்கில் முதலில் வெளியிட்டார். தொடர்ந்து சீன பெருஞ்சுவரில் இருப்பது போன்ற படத்தையும், மவுன்ட் ஹுஷான் மலை மீது வெரும் காலில் நிற்கும் படத்தையும் வெளியிட்டார். இறுதியாக "தி லாஸ்ட் டே ஆஃப் விசிட், பை சீனா" என்று கூறி, சீனக் கோவிலின் முன் சுற்றுலா பயனிகளோடு இருப்பது போன்ற படத்தை வெளியிட்டு தனது விஷுவல் கனவை நிறைவேற்றினார் சீவ்லின்.

இந்த ஃபோட்டோ ஷாப் சுற்றுலாவை ஃபேஸ்புக்கில் கண்ட சீவ்லின்னின் நன்பர்கள் "உனது கனவு நனவாகட்டும்" என்று வாழ்த்தியவர்கள் ஒரு பக்கம் இருக்க, மண்ணிப்பது மனித இயல்பு என்பதை கடந்து கலாய்பது மனித இயல்பு என்றாகிவிட்ட காலம் என்பதால், சீவ்லினின் ஃபோட்டோ ஷாப் படங்களை கலாய்த்து அவரது புகைபடங்களை கொண்டு பல கலாய் புகைபடங்களை ஃபோட்டோ ஷாப் செய்து வெளியிட்டு வருகின்றனர் பல கலியுக கலாய் மனிதர்கள்.

ஆனால், சீவ்லினின் கனவை நிஜமாக்க நினைத்தார் ஒருவர். சாம் கிசுரு என்னும் கென்ய தொழில் அதிபரான இவர், தனது நண்பர்களின் உதவியோடு சீவ்லின் கேட்ஸ் சீனா சென்று வருவதற்கான விமான டிக்கெட், சீனாவில் தங்குவதற்கு 4 ஸ்டார் ஹோட்டல் என எல்லா செலவுகளையும் ஏற்றுள்ளார். அது மட்டுமின்றி கை செலவிற்கும் பணத்தையும் அளித்து சீவ்லினின் கனவை நனவாக்கி உள்ளார்.

நான்கு புகைப்படங்களை ஃபோட்டோ ஷாப் செய்து உலக பேமஸ் அடைந்த சீவ்லின், இன்று செம ஹாப்பி. காரணம், அவர் கனவு கண்டார், கனவு கண்டதோடு மட்டுமில்லாமல் அக்கனவினை துரத்தினார். கனவுகளை என்று நாம் துரத்த தொடங்குகிறோமோ அன்று வெற்றி நிச்சயம் என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளார் சீவ்லின் கேட்ஸ். கூடிய விரைவில் சீவ்லின் தனது ஒரிஜினல் சீன சுற்றுலா புகைப்படங்களை வெளியிடுவார் என நம்புவோம்!

No comments:
Post a Comment