Monetize Your Website or Blog

Monday, 21 March 2016

பாகிஸ்தான் வீரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் கோலி!

விராட் கோலியை அனைவருக்கும் ஆக்ரோஷமான கேப்டன், எதிரணியினரை வம்புக்கு இழுத்து ஸ்லெட்ஜிங் செய்யும் வீரர் என்றுதான் தெரியும். ஆனால் மைதானத்துக்கு வெளியே அவர் கேப்டன் கூலை விட கூலானவர் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 83 ரன்களுக்கு சுருட்டினாலும்,  முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இந்தியா இழந்து தவித்தது.
அப்போது, கோலி ஒற்றை ஆளாக வெற்றிக்கு அழைத்து சென்றார். அந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்,  கோலி உட்பட அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களையும் கதறவிட்டார்.



ஆட்டநாயகன் விருது பெற்ற கோலி, ஆமீரின் பந்துவீச்சை பாராட்டினார். உலகக் கோப்பை போட்டியின் போது இந்தியா வரும் ஆமிருக்கு தனது பேட்டில் ஒன்றை பரிசளிப்பதாக கூறியிருந்தார். அதனை மறக்காமல் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டனில் பயிற்சியில் ஈடுபட்ட போது, ஆமிர் மற்றும் அப்ரிடி ஆகியோருடன் பேசிய கோலி, ஆமிருக்கு தனது பேட்டை பரிசாக அளித்தார். ஆமிரும் பதிலுக்கு நன்றி கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே நடப்பது போட்டி அல்ல போர் என்றாலும், வீரர்களின் நட்பு போட்டியின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தியுள்ளது. என்னதான் போட்டிக்கு முன் கூலாக இருந்தாலும் மைதானத்தில் ஆமிரின் பவுன்ஸருக்கு கோலியும், கோலியின் ஷாட்டுக்கு ஆமிரும் பணிந்தே ஆக வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதி.



No comments:

Post a Comment