Monetize Your Website or Blog

Thursday, 17 March 2016

விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வது எப்படி?

பொதுவாக அரசாங்கம் மக்களுக்கும் வழங்கும் சலுகைகைகள்,நல திட்டங்கள்போன்றவைகள் மக்களுக்கு சரியாக சென்று சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டு எப்போதும்உண்டு,இதற்கு மக்களின் அறியாமையும்,அதிகாரிகளின் அலட்சிய போக்கும் தான் முக்கியகாரணம் என்பதை மறுப்பதற்கில்லைஅதனால் தான்  நம் ஆட்கள் முக்கியமானவிசயங்களில் கோட்டை விட்டு விட்டு,கலர் டிவி வாங்கவும்,வேட்டி சேலை வாங்கவும்முண்டியடித்து முதலிடம் பிடிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அப்படி மக்களின் அறியாமையாலும்அரசு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்ததவறியதாலும்  தான் மத்திய  அரசால் 1986-ம் தொடங்கப்பட்ட "விவசாய மற்றும்பதப்படுத்தப்பட்ட உணவி பொருட்கள் ஏற்றுமதி அமைப்பு" (APEDA  The  Agricultural  and  processed  food products  export  development  Authority "  என்ற ஒன்றே இருப்பது நமது மக்கள்பலருக்கு தெரியாமல் போய்விட்டதுஉற்று கவனித்து இருந்தால்கருப்பு வெள்ளைவிளம்பரமாக தினசரி செய்திதாள்களின் ஏதவாது ஒரு மூலையில் இதை பற்றிய செய்திஇருக்கும். 
தங்கள் பொருள்களை ஏற்றுமதி செய்ய விரும்புவோர் தங்கள் வைத்துள்ள பொருட்களைபற்றிய தகவல்களை இங்கு பதிவு செய்து வைத்துகொள்ள வேண்டும்பதிவு செய்யப்பட்டபொருள்களுக்கான தேவையோடு ஏதவாது வெளிநாட்டு நிறுவனங்கள் இவர்களை தொடர்புகொண்டால் ,இவர்கள் நம்மை தொடர்புகொண்டு வைத்துள்ள பொருள்அளவு ,தரம்போன்றவற்றை பரிசோதித்து ,பிறகு பொருள்களை ஏற்றுமதி செய்யவும் உதவிசெய்வார்கள்ஏற்றுமதிக்கு புதிதாக உள்ள நபர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும்படியாகமானிய தொகைகளும் வழங்கபடுகிறது.காய்கறி,பழங்கள் ,பூக்கள்,பதபடுதபட்டபழச்சாறுகள்,அரிசி,கோதுமை,நிலகடலை,வெல்லம்பால் பொருட்கள்,தேன் , உலர்பழங்கள் போன்றவைகளின் தேவைகள் எந்தெந்த நாடுகளில் உள்ளது போன்ற தகவல்களைஇந்த அலுவலகத்தை அணுகி தகவல் பெறலாம். 
இதன் அலுவலகங்கள்  மும்பைகொல்கத்தா ,ஐதராபாத்,பெங்களூர் போன்ற இடங்களில்இயங்கி வருகிறது.தமிழ்நாடு,கேரளா மாநில மக்களுக்கு தொடர்புக்கு பெங்களூர்அலுவலகம் 
முகவரி 

Regional Incharge,
Agriculture and processed food products,
Export development authority,
12/1/1, Palace cross road,

bangalore - 560 020



Telephone : 080-23343425

                  080-23368272
                
 
ஏற்றுமதி  தொடர்பான அனைத்து தகவல்களையும் மேல் சொன்ன  தொலைபேசி என்னைதொடர்பு கொண்டு பெறலாம். 



No comments:

Post a Comment