Monetize Your Website or Blog

Monday, 21 March 2016

இந்த முறை பிடி கொடுப்பாரா விஜயகாந்த்? மீண்டும் சந்திக்கிறார்கள் மநகூ தலைவர்கள்!

மக்கள் நலக்கூட்டணிக்கு வர தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை மீண்டும் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க இருப்பதாக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 

மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, தொகுதி பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்துள்ளது என்றார். 

கூட்டணி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருவதாகவும், மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் விஜயகாந்த்தை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம் என்றும், மக்கள் நலக் கூட்டணிக்கு வர விஜயகாந்த்துக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறோம் என்றும் வைகோ கூறினார்.

அதிமுக, திமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க தயாராகி வருவதாகவும், பண பலத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையேயான போட்டியாக சட்டமன்ற தேர்தல் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.



No comments:

Post a Comment