Monetize Your Website or Blog

Monday, 28 March 2016

ஜெயலலிதாவை பார்த்து உட்காருன்னு சொன்ன ஒரே ஆம்பளை கேப்டன்: பெருமைப்படும் பிரேமலதா!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து, உட்காருன்னு சொன்ன ஒரே ஆம்பளை கேப்டன் விஜயகாந்த் தான் என்று பெருமையோடு கூறினார் பிரேமலதா.

தே.மு.தி.க. சார்பில் மதுரையில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மகளிர் அணி தலைவை பிரேமலதா கலந்துக் கொண்டு பேசினார். அப்போது அவர், ''விஜயகாந்தை பற்றி அவதூறு செய்திகளையும், அடிப்படை ஆதாரமற்ற பொய் தகவல்களையும் ஊடகங்களும், பத்திரிகைகளும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து தே.மு.தி.க. கூட்டணி அமைத்ததை பல கட்சிகள் விமர்சித்தாலும், அதுதான் இன்று தமிழகத்தின் பேச்சாக உள்ளது. இந்த கூட்டணி உடையும் என்று தி.மு.க.வும் பத்திரிகைகளும் நினைக்கின்றன. ஆனால், இந்தக் கூட்டணி உடையாது. கேப்டன் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதில் இருந்து மாற மாட்டார்.

விஜயகாந்துக்கு முதலமைச்சராகும் தகுதியில்லை என்றால், இங்கு வேறு யாருக்கு தகுதி இருக்கிறது. தே.மு.தி.க. துவங்கியது மதுரையில் தான். அதேபோல், கேப்டன் முதல்வராக பதவி ஏற்கபோவதும் மதுரையில்தான். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவை பார்த்து உட்காருன்னு சொன்ன ஒரே ஆம்பளை கேப்டன் தான்" என்று ஆவேசமாக பேசினார்



No comments:

Post a Comment