டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரை இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது. கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு வித்திட்டார்.
டி20 உலக கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு 161 ரன் இலக்கு நிர்ணயித்தது.
இந்த போட்டியில் யார் வெற்றி அடைகிறார்களோ அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுவர். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். கவாஜா அதிரடியாக விளையாடி 26 ரன்கள் எடுத்து நெகராவிடம் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து வார்னர் அஸ்வினிடம் அவுட் ஆனார். 44 ரன் எடுத்திருந்த ஃபென்ச் பாண்டியாவிடம் தனது விக்கெட்டை இழந்தார்

20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது.

இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதிரடியாக விளையாடிய விராட் கோலி 82 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி டி20 உலகக் கோப்பை அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

No comments:
Post a Comment