Monetize Your Website or Blog

Tuesday, 29 March 2016

80 பயணிகளுடன் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள்!

எகிப்தின் அலெக்சாண்டிரியாவில் இருந்து கெய்ரோ சென்ற விமானம் 80 பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அலெக்சாண்டிரியாவில் இருந்து இன்று நண்பகலில் 80 பயணிகளுடன் எகிப்தியன் ஏர்லைனர் விமானம் கெய்ரோ சென்று கொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் இருந்த பயங்கரவாதிகள் விமானத்தை சைப்ரஸுக்கு கடத்திச் சென்றனர். இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சைப்ரஸில் உள்ள லார்நகா என்ற விமான நிலையத்தில் அந்த விமானம் உள்ளூர் நேரப்படி காலை 8.46 மணியளவில் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானம் தரையிறங்கியதும் அதில் ஒரு நபர் ஆயுதத்துடன் இருப்பதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளை தற்போது வெளியேற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலை எகிப்து நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

மேலும், விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதுடன், விமானத்தை கடத்தியவர்களும் வெடிகுண்டுகள் கட்டிய உடுப்புகளை அணிந்தவாறு விமானிகளை மிரட்டியுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

பயணிகள் விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தி சென்றிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.



No comments:

Post a Comment