ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக ஊடகங்களில் பல்வேறு விதமான செய்திகள் பரவிய நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார் பன்னீர் செல்வம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை செல்வதற்காக, சென்னை விமான நிலையம் சென்ற தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென தனது பயணத்தை ரத்து செய்து விட்டு, ஓட்டலில் தங்கினார். இதையடுத்து, மீண்டும் அவர் பயணம் மேற்கொள்ள சென்றபோதும், ஒரு போன் கால் வந்ததாகவும், இதையடுத்து, சீரியசான ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஓட்டலில் தங்கியிருந்து, யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
அதைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகின. சமீப நாட்களாக இவ்வாறானா சர்ச்சைகள் கச்சை கட்டிய நிலையில், கடந்த இரு தினங்களாக ஓ.பன்னீர்செல்வத்துடன், நத்தம் விஸ்வநாதன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்களது வீட்டிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், பொள்ளாச்சியில் பன்னீர்செல்வம் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார் எனவும், அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் கோவை மருத்துவமனையில் சேர்த்திருப்பதால் அவர் பொள்ளாச்சியில் தங்கியிருக்கிறார் எனவும் இன்று (18-ம் தேதி) வெவ்வேறு விதமாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஓ.பன்னீர்செல்வம் குறித்துவெளியாகும் தகவல்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், இன்று (18-ம் தேதி) மாலை தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை, நிதியமைச்சரும், அ.தி.மு.க. பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில், சுமார் 30 நிமிடங்கள் இந்த பேச்சு வார்த்தை நடந்தது.
இருப்பினும், இந்த சந்திப்பு எதற்காக நடந்தது என்பது குறித்து எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்றபோதிலும், பன்னீர் செல்வம் குறித்து வெளியாகும் பரபரப்பு செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த சந்திப்பு அரங்கேற்றப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை செல்வதற்காக, சென்னை விமான நிலையம் சென்ற தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென தனது பயணத்தை ரத்து செய்து விட்டு, ஓட்டலில் தங்கினார். இதையடுத்து, மீண்டும் அவர் பயணம் மேற்கொள்ள சென்றபோதும், ஒரு போன் கால் வந்ததாகவும், இதையடுத்து, சீரியசான ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஓட்டலில் தங்கியிருந்து, யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பொள்ளாச்சியில் பன்னீர்செல்வம் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார் எனவும், அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் கோவை மருத்துவமனையில் சேர்த்திருப்பதால் அவர் பொள்ளாச்சியில் தங்கியிருக்கிறார் எனவும் இன்று (18-ம் தேதி) வெவ்வேறு விதமாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஓ.பன்னீர்செல்வம் குறித்துவெளியாகும் தகவல்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், இன்று (18-ம் தேதி) மாலை தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை, நிதியமைச்சரும், அ.தி.மு.க. பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில், சுமார் 30 நிமிடங்கள் இந்த பேச்சு வார்த்தை நடந்தது.
இருப்பினும், இந்த சந்திப்பு எதற்காக நடந்தது என்பது குறித்து எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்றபோதிலும், பன்னீர் செல்வம் குறித்து வெளியாகும் பரபரப்பு செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த சந்திப்பு அரங்கேற்றப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment