விருதுநகரில் டீக்கடையில் வெங்காயத்துக்கு பதில் ஓணானை உள்ளே வைத்து சமோசாவை விற்பனை செய்துள்ளார் கடைக்காரர். இதனை வாங்கி சாப்பிட்டவர் அதிர்ச்சியில் மயங்கியே விழுந்துவிட்டார்.
வெங்காய சமோசா, கேரட் சமோசா, கோஸ் சமோசா என்றுதான் நாம் சாப்பிட்டு இருக்கிறோம். தற்போது, விருதுநகரில் ஓணான் சமோசா விற்பனை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் சிலர், அங்குள்ள டீக்கடையில் வாங்கி சாப்பிட்டு உள்ளனர். அப்போது ஓணானுடன் இருந்த சமோசாவை சாப்பிட்ட பணியாளர் ஜெயக்கனி என்பவர் மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு தகவல் தெரிவி்க்கப்பட்டதை அடுத்து, அவர் வந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சமோசாக்களை பறிமுதல் செய்து அழித்தார். மேலும், அருகிலிருந்த கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சமோசாக்களையும் கைப்பற்றி அழித்தார்.
சமோசாவில் ஓணான் இருந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் புறநகர் ரயில்களில் அதிகமாக விற்பனையாவது சமோசாதான். அந்த அளவுக்கு சமோசா விரும்பிகள் அதனை வாங்கி சாப்பிடுகின்றனர். இனியாவது உஷாராக இருப்பார்களாக சமோசா பிரியர்கள்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பஞ்சாப் மாநிலம், மோகா மாவட்டத்தின் காஜியானா கிராமத்தில் மார்க்கெட் பகுதியில் சமோசாவிற்குள் பல்லி வால் இருந்ததால் கடைக்காரருக்கும், வாங்கி சாப்பிட்டவருக்கும் இடையே பெரும் பிரச்னையே வெடித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment