Monetize Your Website or Blog

Tuesday, 29 March 2016

மருத்துவமனையில் இருந்து கெளசல்யா டிஸ்சார்ஜ்- கணவர் வீட்டுக்கே சென்றார்!

உடுமலை ஆணவக்கொலை சம்பவத்தில் படுகாயமடைந்த கெளசல்யா, இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சங்கரின் குடும்பத்தார் வீட்டுக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.

உடுமலையில் கடந்த 13ம் தேதி, பட்டப்பகலில் பல நூறு பேர்களுக்கு மத்தியில் சாதி மாறி திருமணம் செய்ததற்காக சங்கர் - கெளசல்யா தம்பதியினர் சிலரால் வெட்டி வீழ்த்தப்பட்டனர். இதில் சங்கர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கெளசல்யா படுகாயமடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.



                                       

இந்த வழக்கில் கெளசல்யா அளித்த புகாரின் பேரில், அவரது அப்பா, அம்மா, மாமா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கெளசல்யாவின் அப்பா, மாமா உள்ளிட்ட 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்மாவை போலீசார் தேடி வருகின்றனர். கணவர் சங்கர் உயிரிழக்க, பெற்றோர் கொலை வழக்கில் சிறை செல்ல தனிமரமாக நின்றார் கெளசல்யா. 

இந்நிலையில் தன் கணவர் குடும்பத்துக்காக அவர்களோடு வாழ விரும்புவதாக கெளசல்யா தெரிவித்திருந்தார். இதையேற்று சங்கரின் பெற்றோர் கெளசல்யாவை தங்களோடு அழைத்து செல்ல விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து இன்று மாலை கெளசல்யா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை சங்கரின் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்து அழைத்து சென்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் உடுமலையில் உள்ள சங்கரின் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.




No comments:

Post a Comment