சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள், அதை வைத்துபராமரிக்க முறையான பயிற்சி மற்றும் கன்றுக்கு ஊக்கத்தொகை என பல வகைகளில்விவசாயிகளின் வாழ்க்கையை வனவியல் விரிவாக்க மையம் வளமாக்கி வருகிறது.தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் வனவியல் விரிவாக்கமையம் இயங்கி வருகிறது.இங்கு தேக்கு, சவுக்கு, குமிழ், மகானி, வேங்கை, செம்மரம்,மூங்கில், சவுக்கு உள்ளிட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாகவழங்குகிறது.
குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்துள்ள விவசாயிகள் நிலத்துக்கு உரியஆவணங்களும், ரேஷன்கார்டு ஆகியவற்றுடன் வனவிரிவாக்க மையத்தை அணுகினால்வனவிரிவாக்க மைய அலுவலர்கள் விவசாயிகளின் இடத்துக்கே நேரில் சென்று ஆய்வுசெய்து அந்த மண்ணின் வளத்துக்கேற்றவாறு மரக்கன்றுகளை விவசாயிகளுக்குஇலவசமாக வழங்குவர். ஒரு ஏக்கருக்கு 400 or 500 கன்றுகள் வரை வழங்கி அதைமுறையாக பராமரிக்கும் பயிற்சி, மண் புழு உரம் மற்றும் தேவையான வழிமுறைகளையும்விவசாயிகளுக்கு எடுத்து கூறி வளம் பெறச் செய்கின்றனர்.
ஊக்கத்தொகை:
-----------------------
தங்களது வயலில் பயிரிட்டிருந்தாலும் அதன் வரப்பு ஓரங்களில் மரக்கன்றுகளைவரிசையாக நட்டு அதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வளம் பெற வழிகாட்டுகின்றனர்.நாளடைவில் வனவியல் விரிவாக்க மைய அலுவலர்களின் வழிகாட்டுதலை முறையாகபின்பற்றி மரக்கன்றுகளை முறையாக பராமரிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாகஒரு கன்றுக்கு ரூ.5 வழங்குகின்றனர். ÷தேக்கு 20 ஆண்டுகள், மகானி 20 ஆண்டுகள்,வேங்கை 20 ஆண்டுகள், குமிழ் 7 ஆண்டுகள், மூங்கில் 3 ஆண்டுகள், சவுக்கு 4 ஆண்டுகள்என பருவத்துக்கு ஏற்றவாறு மரங்கள் விவசாயிகளுக்கு பெருத்த லாபத்தை ஏற்படுத்திதருகின்றன.
மரக்கன்று விநியோகம்:
---------------------------------இது குறித்து பூண்டியில் உள்ள வனவியல் விரிவாக்க மைய அலுவலர் சிவலிங்கம்கூறும்போது, "3.10 ஏக்கரில் இங்கு தேக்கு, வேங்கை, குமிழ், மகானி உள்ளிட்ட பல்வேறுமரக்கன்றுகளை வளர்த்து அதை உரிய பருவத்தில், நாடி வரும் விவசாயிகளுக்கு வழங்கிவருகிறோம். கடந்த 2009-ம் ஆண்டு இம்மாவட்டத்தில் 60 ஆயிரம் மரக்கன்றுகளைவிவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். ÷வனவியல் விரிவாக்க மையம் குறித்த விழிப்புணர்வுவிவசாயிகளுக்கு முழு அளவில் ஏற்படாததால் தற்போது கிராமப்புறங்களில் சென்றுபயிற்சி கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். 2011-ம் ஆண்டில் 2 லட்சம்மரக்கன்றுகளை இம்மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயித்து அதற்காகமுயற்சி மேற்கொண்டு வருகிறோம்' என்றார். விவசாயிகள் மேலும் விவரங்களுக்கு9994347739 என்ற எண்ணில் வன விரிவாக்க மைய அலுவலர் சிவலிங்கத்தை தொடர்புகொண்டு தங்கள் அருகில் உள்ள வன அலுவலகத்தின் தொலைபேசி என்னை பெறலாம்.
For more information : 91 9886650235


No comments:
Post a Comment