Monetize Your Website or Blog

Friday, 18 March 2016

லேஸ்கள் தானாக கட்டிக்கொள்ளும் ஷூ அறிமுகம்!

 திரைப்படத்தில்,  விக்ரம் காலை வேகமாக ஆட்டியவுடன் ஷூ லேஸ்கள் தானாக கட்டிக்கொள்ளும். ஆனால் நைக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய காலணியை அணிந்த உடன் லேஸ்கள் தானாக இறுகிக்கொள்ளும். 

ஹைபர் அடாப்ட் 1.0 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஷூக்கள்,  இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக சந்தைகளில் கிடைக்கும் என அறிவித்துள்ளனர்.
1989-ம் ஆண்டு பேக் டு தி ஃபியூச்சர் திரைப்படத்தில் இது போன்றதொரு காலணியை காட்டியதாகவும்,  அதன் பிறகே இந்த மாடல் ஷூக்களை தயாரிக்க நைக் நிறுவனம் முயற்சித்து வந்ததாகவும் தெரிகிறது. 

இந்த தொழில் நுட்பம் சரியாக அமைவதற்காக பல ஆண்டுகள் உழைத்ததாகவும், பலகட்ட சோதனைகளுக்கு பின்தான் இந்த வடிவம் கிடைத்ததாகவும் நைக் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் அறிய வீடியோவைக் காண்க...



No comments:

Post a Comment