Monetize Your Website or Blog

Monday, 28 March 2016

விஜயகாந்தின் தாக்கமே வைகோவின் நடவடிக்கைக்கு காரணம்: சீண்டும் இளங்கோவன்!

 ஒரு தொலைக்காட்சி பேட்டியின்போது நிருபர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் 'மைக்'கை தூக்கி எறிந்துவிட்டு வைகோ பாதியிலேயே கோபமாக எழுந்து சென்றதற்கு காரணம், விஜயகாந்தின் தாக்கமே என்று காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் விமர்சித்து உள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''தி.மு.க.வோடு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. எண்ணிக்கைகள் பேசி இருக்கிறோம். நாளை அல்லது நாளை மறுநாள் முடிவு செய்யப்பட்டுவிடும் என்று நினைக்கிறோம். அதன் பிறகு எந்தெந்த தொகுதிகள் என்பது தெரியவரும்.

எங்களை பொருத்தவரை நாங்கள் ஏற்கனவே பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டோம். பல இடங்களிலே காங்கிரஸ் கூட்டங்கள் நடைபெறுகின்றன். அந்த கூட்டங்களில் தி.மு.க. நண்பர்கள் கலந்துகொள்கிறார்கள். அதேபோல், தி.மு.க. நடத்துகின்ற நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ்காரர்கள் கலந்துகொள்கின்றனர்.

வைகோ நேற்று தொலைக்காட்சி பேட்டியின்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் 'மைக்'கை தூக்கி எறிந்துவிட்டு பாதியிலேயே அவர் கோபமாக எழுந்து சென்றுவிட்டார். இதற்கு காரணம் என்னவென்று கேட்டால் நான், சகவாச தோஷம் தான் என்று கூறுவேன்.

விஜயகாந்த் அங்கே சேர்ந்து இருக்கின்றார். ஆகவே இதுபோன்ற நடவடிக்கைகளை மற்றவர்களும் செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதற்கு உதாரணம் தான் வைகோவின் இத்தகைய நடவடிக்கைகள்.



No comments:

Post a Comment