Monetize Your Website or Blog

Friday, 11 March 2016

மொத்த வாராக் கடன் ரூ. 1.44 லட்சம் கோடி, அதில் வெறும் ரூ. 7000 கோடிதானே!

வங்கிகள் ஒன்றுவிடாமல் கடனை வாங்கிவிட்டு நாட்டை விட்டு தப்பினார் மல்லையா என்பது செய்தி. ரூ. 7000 கோடி அம்போதானா? நியாயமான கேள்விதான். வங்கிகளுக்கு மல்லையா போன்ற பலர் தர வேண்டிய மொத்த வாராக் கடன் ரூ. 1.44 லட்சம் கோடி. அதில் மல்லையாவின் கணக்கு வெறும் ரூ. 7000 கோடிதான். அப்படியென்றால் மீதியெல்லாம் யாருக்கு கொடுத்திருக்கிறது?
விவசாயியும் மல்லையா போன்ற பெரும்பணக்காரர்களும்!

விவசாயி ஒருவர் சாகக் கிடக்கும் பயிருக்கு உரம் போட கடன் வாங்க வாசலில் காத்துக் கிடக்கிறார். அவரை சீண்டுவாரில்லை. அப்படியே அதிசயமாக வங்கியாளர் தரிசனம் கிடைத்தாலும், ஏகப்பட்ட நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் காரணம் காட்டி கடனை மறுத்து விடுகிறார்கள். ஆனால் மல்லையா போன்ற பெரும்பணக்காரர்களுக்கு கோடி கோடியாக எந்த நிபந்தனைகளும் இன்றி கொட்டி கொட்டி தரப்படுகின்றன. இப்போது அத்தனையும் வாராக் கடன்களாக மாறி நாட்டிற்கே பெரும் பிரச்னையாக மாறியிருக்கிறது.
வங்கிகள் அவருக்கு கொடுத்த கடன் பட்டியலையும் கொஞ்சம் பாருங்களேன்:
பாரத ஸ்டேட் பாங்க்  ரூ.1,600 கோடி
பஞ்சாப் நேஷ்னல் பாங்க்  ரூ.800 கோடி
ஐ.டி.பி.ஐ ரூ. .900 கோடி
பாங்க் ஆப் இந்தியா ரூ.650 கோடி
பாங்க் ஆப் பரோடா  ரூ.550 கோடி
யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ரூ.430 கோடி
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா  ரூ.410 கோடி 
யூகோ பாங்க்  ரூ.320 கோடி
கார்ப்பரேசன் பாங்க்  ரூ.310 கோடி
ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்  ரூ.150 கோடி
இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் ரூ.140 கோடி
ஃபெடரல் பாங்க்  ரூ.90 கோடி
பஞ்சாப் அணடு  சிந்த் பாங்க் – ரூ.60 கோடி
ஆக்சிஸ் பாங்க்  ரூ.50 கோடி 
இந்த வாராக் கடன்களுக்கு யார் காரணம்?
இந்த மொத்த 1.44 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன்களுக்கும் யார் காரணம்? கடன் வாங்கிய பெரும் பணக்காரர்களா? வங்கியாளர்களா? அரசா? யாரைக் கேட்பதென்றே தெரியவில்லை. 
வங்கிகள் இன்று மக்களுக்குக் கட்டாய ஒன்றாக மாறிவிட்டது. உழைத்து சம்பாதித்தது 100 ரூபாயாக இருந்தாலும் அதனை வங்கியில் வைத்து சேமிக்கவே மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் வங்கிகள் இதுபோன்று கடனை வாங்கி ஏப்பம் விடும் பெரும் பணக்காரர்களுக்கு மக்கள் பணத்தை வாரிக் கொடுத்துவிட்டு தற்போது நெருக்கடி என்று புலம்பிக்கொண்டிருக்கிறது. 
விஜய் மல்லையா வாங்கியக் கடன் ரூ. 7000 கோடியா அல்லது ரூ. 9000 கோடியா என்பதே பெரும் குழப்பமாக இருந்துகொண்டிருந்த நேரத்தில், மார்ச் 2-ம் தேதி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று மார்ச் 9-ம் தேதி தகவல் வெளியாகிறது. ஆனால் விவசாயி ஒருவர் வாங்கியக் கடனை திருப்பி செலுத்தாதற்கு உயிரை எடுக்கும் வரை விடாமல் துரத்துக்கின்றன வங்கிகள். எந்த மாதிரியான நாட்டில் நாம் வசித்துக்கொண்டிருக்கிறோம் என்றே தெரியவில்லை.

மக்களின் பணத்தை வாங்கி ஏப்பம் விட்ட மல்லையா போன்ற பிற பண முதலைகளின் பட்டியல் எங்கே? அவர்களும் வெளிநாடு தப்பித்த பின்னர்தான் சொல்வீர்களா?


No comments:

Post a Comment