Monetize Your Website or Blog

Monday, 7 March 2016

கண்ஹையா குமார் 15 வயது மாணவி ஜான்வியின் சவாலை ஏற்பாரா?

பேச்சு சுதந்திரம் என்றால் என்னவென்று ஜவஹரலால் பல்கலை மாணவர் தலைவர் கண்ஹையா குமாரிடம் கேள்வி கேட்டு அது தொடர்பாக தன்னிடம் பொது விவாதத்துக்கு வரத் தயாரா? என பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த  15 வயது மாணவி ஜான்வி வினா எழுப்பியுள்ளார். 

மத்திய அரசையே மிரள வைக்கும் கண்ஹையா குமாரிடம் சவால் விடும்  மாணவி ஜான்வியும்  லேசுபட்டவர் அல்ல. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் டி.ஏ.வி பள்ளியில் ஜான்வி படித்து வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு ஜான்வி நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் நடத்தினார். லூதியானாவின் பல பகுதிகளில்  பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்து போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கில் ஏராளமான கடைகள் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டது. 

அன்னை தெரசாதான் ஜான்வியின் ரோல் மாடல். சிசுக் கொலை பற்றி இவர் எடுத்த ஆவணப்படம் பஞ்சாப், ஹரியானா மாநிலத்தில் பெரும் விழிப்புணர்வையே ஏற்படுத்தியது. ரக்ஷா ஜோதி அறக்கட்டளையில் இணைந்து பணியாற்றி வருகிறார். தனது சேவைகளுக்காக இளம் வயதிலேயே குடியரசுத் தலைவரிடம் விருதுகளை பெற்றவர். 
பொது பிரச்னைகளுக்காக  தர்ணாவில் ஈடுபடுவது ஜான்வியின் படிப்பைத் தவிர மற்றொரு வழக்கமான பணி. பல்வேறு சமூகப்பணிகள் குறித்து குடியரசுத் தலைவர்,  பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, செய்தித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிக் கொண்டே இருப்பார். 


ச மூக வலைதளங்களில் பாலுறவு படங்களுக்குத் தடை விதிக்க வேண்டுமென பஞ்சாப்  மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் ஜான்வி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பள்ளி சீருடையுடனே நேரில் ஆஜரானார்.  நீதிமன்றம் ஜான்விக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. 

இந்த ஜான்விதான் தற்போது பேச்சு சுதந்திரம் பற்றி எந்த இடத்திலும் கண்ஹையா குமாரிடம் விவாதிக்கத் தயார்? அதற்கு அவர் தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.


No comments:

Post a Comment