1967-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நேரம் அது. கடையநல்லூரில் ஒரு பொதுக்கூட்டம். இரவு 7 மணிக்கு அப்போதைய தி.மு.க பொதுச்செயலாளர் அண்ணா பேசுவார் என அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால், இரவு கடந்து, நள்ளிரவை தாண்டி சூரியன் உதிக்கும் அதிகாலை நேரம் நெருங்கும் வரை அண்ணா வரவில்லை. அதிகாலை 4.30 மணியளவில் ஒரு லாரி ஒன்று மேடையை நோக்கி வந்தது. லாரியில் இருந்து வேகமாக இறங்கி ஒருவர் மேடையை நோக்கி வந்தார். அவர்தான் அண்ணா. பின்னர் 5 மணிக்கு பேச்சை துவங்கி அதிகாலை 6 மணியளவில் தன் உரையை அண்ணா நிறைவு செய்தார்.

அறிஞர் அண்ணா மட்டுமல்ல, காமராஜர், ராஜாஜி, கருணாநிதி என அப்போதைய தமிழக அரசியல் தலைவர்களின் பிரசார களங்கள் இப்படித்தான் இருந்து வந்தன. கால் வலிக்க நடந்து, வெயிலில் சுற்றித்திரிந்து தேர்தல் பிரசாரம் செய்வார்கள் அரசியல் தலைவர்கள். ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். வேட்பாளர்கள்தான் அலைந்து திரிகிறார்கள். வீட்டில் இருப்பது போன்ற அதிநவீன் வாகனங்களை தயார் செய்து, குளிர்சாதன வசதி துவங்கி அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக மாறிவிட்டது தலைவர்களின் பிரசார வாகனம். ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் துவங்கி அனைத்து தலைவர்களுக்கும் பிரசார வேன்கள் தயாராகி வருவது மோட்டார் நகரமான கோவையில்தான். தலைவர்களின் பிரசார வாகனங்களில் என்னவெல்லாம் இருக்கிறது என்கிறீர்களா? அதைத்தான் பார்க்கப்போகிறோம்....

ஜெயலலிதாவுக்கு 4 வாகனங்கள்
பிரசாரத்துக்கு வருவாரா இல்லையா? என கேள்வி எழும் அளவுக்கு ஜெயலலிதா உடல்நிலை பற்றி ஏகப்பட்ட செய்திகள் வெளியாகி வந்த நிலையில், ஜெயலலிதாவுக்கான பிரசார வாகனங்கள் தயாராவது அவர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதை உறுதி செய்கின்றன. அதே நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கூடுதல் வசதிகளோடு இரண்டு வகையில் பயண வாகனங்கள் ஜெயலலிதாவுக்கு தயாராகியுள்ளன.
தமிழகத்தின் தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேர்தல் பிரசாரத்துக்காக இதுவரை 4 வாகனங்கள் தயாராகி வருகின்றன. இதில் இரு வாகனங்கள் பிரசாரத்துக்காக... மற்ற இரு வாகனங்கள் ஓய்வுக்காக... ஜெயலலிதா பிரசார வாகனத்தின் முன்புறம் ஜெயலலிதாவுக்கான இருக்கை இருக்கும். அது சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல் நடுவில் ஒரு இருக்கை இருக்கும். சுழலும் வகையிலும், மேலும், கீழும் செல்லும் வகையில் ஹைட்ராலிக் லிப்ட் பொருத்தப்பட்டும் இருக்கும். வாகனத்தின் உட்புறமும், வெளிப்புறமும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். வேன் அலுங்காமல் குலுங்காமல் செல்ல வசதியாக, அதிநவீன் சேக்கப்சர் சேர்க்கப்பட்டுள்ளது.

பிரசார வாகனத்தில் ஏறி அமர்ந்த உடன், முன்னிருக்கையில் அமர்ந்து கொள்ளலாம். பேசும்போது, இருக்கையை சுழல விட்டு, பின்னிருக்கையில் மாறி அமர்ந்து ஸ்விட்ச் ஒன்றை போட்டால் போதும், இருக்கை அப்படியே மேல் நோக்கி சென்று வேனின் மேற்புறம் வழியாக ஜெயலலிதா தோன்றி பேசுவார். வெளியே இருந்து பார்க்க ஜெயலலிதா நின்று கொண்டு பேசுவது போல் தோன்றினாலும், அமர்ந்தபடியே பேசும் வகையில் இந்த வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறையும் இதேபோன்ற வாகனத்தை ஜெயலலிதா பயன்படுத்தியிருந்தாலும், இந்த முறை வாகனத்தின் இருக்கைகள் உள்ளிட்டவை கூடுதல் வசதி கொண்டவையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, இந்த முறை ஓய்வுக்கென தனியாக ஒரு வாகனம் அ.தி.மு.க.வுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது. படுக்கை, கழிப்பிடம் போன்ற அதிநவீன வசதிகளுடன் இந்த வேன் அமைக்கப்பட்டுள்ளது. டி.வி பார்க்கலாம். ஓய்வு எடுக்கலாம் என மிக பொருட்செலவில் தயாராகும் கேரவேன் இதுவாகும். இரு வாகனங்கள் தயாராகி வழங்கப்பட்ட நிலையில், இரண்டு பிரசார வாகனங்கள் வேகமாக தயாராகி வருகிறது.

கருணாநிதிக்கு சிறப்பு வாகனம்
இதுவே என் கடைசி தேர்தலாக இருக்கலாம் என கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைவர் கருணாநிதி அறிவித்திருந்த நிலையில், இந்த தேர்தலிலும் கருணாநிதி பிரசாரத்துக்கு வருகிறார். அவருக்கு என பிரத்யேகமான வாகனம் தற்போது தயாராகி வருகிறது. கடந்த முறை பிரசார வாகனத்தில் இருந்து கருணாநிதியை ஏற்றுவது, இறக்குவது என்பதில் மிகப்பெரிய சிக்கல் நீடித்தது. இதனை தவிர்க்கும் வகையில் வழக்கமான பிரசார வேனாக இல்லாமல் அவரது காரில் உள்ளதை போன்றே பிரசார வாகனத்திலும் வீல்சேரை நேரடியாக ஏற்றிக்கொள்ளும் வகையில் இந்த வேன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் இடது புறம் மிகப்பெரிய கதவுடன் அந்த வேன் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
கருணாநிதி அமரும் சீட்டுக்கு பின்னால் சிலர் அமரும் வகையில் இந்த வேன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகனம் முழுவதும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. தி.மு.க தலைவர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரியான டி.எஸ்.பி. பாண்டியன் மேற்பார்வையில் தயாராகி வருகிறது இந்த வேன். இப்போது தான் ஆரம்ப கட்டப்பணிகள் நடந்துள்ளது. இந்த வேன் தயாராக இன்னும் சில தினங்கள் ஆகலாம்.

ஸ்டாலினுக்கு 2 வாகனங்கள்
தற்போதைய சூழலில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு தயார் நிலையில் உள்ளது ஸ்டாலின்தான். அட ஆமாங்க. அவர் பிரசார வாகனம் மட்டும்தான் தயாராகி, டெலிவரியும் கொடுக்கப்பட்டு விட்டது. நமக்கு நாமே பயணத்துக்காக ஸ்டாலினுக்கு பென்ஸ் நிறுவனத்தின் அதிநவீன வேன் தயாரானது. இந்நிலையில் தற்போது மேலும் இரு பிரசார வாகனங்கள் தயாராகியுள்ளன. பென்ஸ் நிறுவனத்தின் இந்த வாகனத்தில், ஸ்டாலினோடு சிலர் அமரும் வகையில் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிறிய படிக்கட்டுகளுடன் கூடிய மேடை உட்புறம் போடப்பட்டுள்ளது. இதன் மேலே ஏறி சென்றால் மேல்புறம் வழியாக மக்களை சந்தித்து பேச இந்த வாகனங்கள் தயாராகி வருகின்றன. குளிர்சாதன வசதி, பிரிட்ஜ், ஓய்வு எடுக்கும் வகையில் வசதியான இருக்கைகள், டி.வி உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஜெயலலிதாவுக்கு பிறகு மிக சொகுசான வாகனத்தை பயன்படுத்துவது ஸ்டாலின்தான் என்கிறார்கள்.
விஜயகாந்த் இதிலும் லேட்
கூட்டணி பேச்சை முடிக்காமல் இழுத்துக்கொண்டிருக்கும் விஜயகாந்த், பிரசார வாகனத்திலும் லேட்தான். இன்னும் அவரது வாகனம், தயாரிப்பு இடத்துக்கு வரவே இல்லையாம். இப்போதுதான் பேசியிருக்கிறார்களாம். விரைவில் வாகனம் அனுப்புவதாக சொல்லியிருக்கிறார்களாம். அதுவும் சரிதான் முதலில் கூட்டணி தயாராக வேண்டாமா என்ன?

இவர்களை தவிர ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்களுக்கும் வேன்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அவை பெரிய அளவில் வசதி கொண்டதாக இல்லை. வழக்கமான பிரசார வாகனங்களை போல அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பிரசார வேன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கோயாஸ் அமெகோ நிறுவனத்தின் அதிகாரி ரியாஸிடம் பேசினோம்.

"நாங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 4 தேர்தலுக்கு வாகனங்களை தயார் செய்து வழங்கியுள்ளோம். தமிழகம், ஆந்திராவை சேர்ந்த பல அரசியல் தலைவர்களுக்கு இங்கிருந்து தேர்தல் பிரசார வாகனம் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க என அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களுக்கும் வேன் தயாராகி வருகிறது. கடந்த தேர்தலில் நிறைய வாகனங்களை தயாரித்தோம். இந்த முறை குறைவு. இன்னும் சில நாட்களில் அதிக வாகனங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம்.
வைஃபை, குளிர்சாதன வசதி என தற்போது மேம்படுத்தப்பட்ட வசதிகள் வாகனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த முறை முழுக்க ஹாலஜின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டது. இப்போது எல்லா வாகனங்களிலும் எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் எரிச்சல் குறையும். இந்த பிரசார வேனில் நின்று கொண்டு மேற்கூரை வழியாக மக்களை சந்திக்க வசதியாக வேனின் நடுப்பகுதியில் தானியங்கி சிறிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. பகல் வேளையில் பிரசாரம் செய்யும்போது குடைபோன்ற கூரையும் சேர்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரசாரம் செய்பவருடன் இருவர் நிற்கும் அளவுக்கு இந்த மேடை விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
ஏசி வேனில் அமர்ந்தபடியும், நின்றபடியும் பேச தலைவர்கள் தயாராகி விட்டனர். தலை காய, கால்கள் கொப்பளிக்க, வேர்வை ஊற்றெடுக்க தலைவர்களை காண தயாரா மக்களே?

No comments:
Post a Comment