"நேரமாகிருச்சி எனக்கு சாப்பாடு வேணா. நா வெளிய ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறேன்" - இந்த குரல் எல்லார் வீட்லயும் கேட்க கூடியது தான். ஆனால், மணிக்கணக்காக வேலை செய்யனும்னு நினைக்கிற நாம், ஒரு அரைமணி நேரமாவது சாப்பாட்டுக்காக ஒதுக்கனும்னு நினைக்கிறது கிடையாது. எல்லா விஷயத்திலயும் சுத்தத்தை பார்க்கிற நாம், சாப்பாட்லயும் அதே சுத்தத்தை பார்க்கிறோம். ஆனா ஆரோக்கியம்?
நாம் கொஞ்சம் ஆழமாக யோசிக்கிற போது, ஒரு பெரிய கேள்விகுறி நம்ம சாப்பாடு முன்பாக நிக்கிறதே தெரியுது. இனி அப்படிப்பட்ட கேள்வியே வேண்டாம் என்கிறார், திருச்சி மாவட்டம், புத்தூரில் செல்லம்மாள் மெஸ் நடத்தி வரும் செல்வி.

கோவில்கள் நிறைந்த சிறந்த சுற்றுலாத்தள மாவட்டமாகவும், வெளியூர், வெளிநாட்டு பயணிகள் வருகை புரியும் ஊராகவும் விளங்ககூடியது நம்ம திருச்சி மாவட்டம். அப்படி வெளியூர், வெளிநாடுகளிலிருந்து நம்மள தேடி வருகிறவங்கள நாம கவனிச்சுக்கிறதுதானே சிறந்த உபசரிப்பாக இருக்க முடியும்.
உபசரிப்பெல்லாம் வேணா நல்ல உணவு கிடைச்சா போதும் என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்டது தான் செல்லம்மாள் மெஸ். இதுல என்ன புதுசா இருக்கிறது கேட்கிறீர்களா?
நம்ம தலைமுறை குழந்தைகள் பார்க்காத குதிரைவாலி அரிசி சாதம், வாழைப்பூ உருண்டை குழம்பு, கொள்ளுரசம், வரகு, கேழ்வரகு - அவள் பாயசம், வாழைப் பூ வடை, வாழைப் பூ துவையல் என 32 வகையான பாரம்பரிய உணவுகளை தினமும் தன்னுடைய செல்லம்மாள் மண்பானை உணவகத்துல வழங்குறாங்க.

சர்க்கரை நோயாளிகளும், அல்சர் போன்ற வயிற்றுப் புண் உள்ளவர்களும், அன்றாட வாழ்வில் பல காரணங்களுக்காக மருந்து உண்பவர்களுக்கும் தக்க உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட ஒரு கப் ரூ.10 என்ற விலையில் ஆரோக்கியத்தையும் உடன் வழங்குகிறார்கள்.
செல்லம்மாள் உணவகத்துல குளிர்சாதன வசதி கிடையாது. ஆனால், எப்போதும் குளுகுளு என்றுதான் இருக்கிறது. உணவகம் முழுவதும் மண்பானையால் சூழப்பட்டிருக்கிறது. சின்னச் சின்ன மண் குடுவைளில் தான் உணவு பரிமாறுகிறார்கள். சமையல் செய்வதும் மண் பானையில்தான்.
இதை பற்றி செல்வியிடம் கேட்டபோது, ''இந்த மெஸ் தொடங்கப்பட்டு இரண்டரை வருடம் ஆகுது. பெண்களா சேர்ந்து உணவகம் நடத்துறதுனால முதல் ஒரு வருடம் கஷ்டமாகத்தான் இருந்தது. திருநெல்வேலி மற்றும் பாண்டிச்சேரி போன்ற இடங்கள்ல செய்கிற பானைகளை வாங்கி வந்துதான் சமைக்கிறோம்.

மண் பானையில் சமைக்கிறதால உணவுப்பொருளோட முழுசத்தும் கிடைக்குது. அதோடு, உணவுப்பொருட்களோட நிறமும் மாறாது. சமைக்கிறப்போ 20% மட்டுமே வீணாகும். விறகுகள் கொண்டு புகையில்லாத, புகைபோக்கி அடுப்புகளை வைத்து சமைக்கிறதால, சமையல் செய்கிற 10 பெண்களுக்கும் எந்தவித பாதிப்பும் வருவதில்ல.
நாங்களே அரைக்கிற, இடிக்கிற மிஷின்கள் வச்சிருக்கிறோம். செக்குல ஆட்டி எடுக்கிற நல்லெண்ணெய்ல தான் முழுக்க முழுக்க சமையல் செய்கிறோம்.
ஒரு மதத்திற்கு குறைஞ்சது ரூ.35 ஆயிரத்தில இருந்து ரூ.45 ஆயிரம் வரை செலவாகும். பல நேரங்கள்ல சமைக்கும்போதும், உணவுப் பரிமாறும் போதும் மண்பாண்டங்களை கவனக்குறைவா கையாளுறதுனால பானைகள் உடைஞ்சு போகுது. இதனால், கூடுதல் செலவானாலும் தரம் மேம்படுகிறது. ஆரோக்கியமான உணவின் மீது உள்ள இஷ்டம் புரியும் போது கஷ்டம் விலகிபோகிறது'' என்றார்.

No comments:
Post a Comment