Monetize Your Website or Blog

Saturday, 12 March 2016

குஜராத் அணு உலை கசிவால் மூடல்: ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்!

குஜராத் மாநிலத்தில் உள்ள கக்ரபார் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் இருந்து தண்ணீர் கசிந்ததை அடுத்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கக்ரபார் அணுமின்நிலைய இயக்குநர் எல்.கே.ஜெயின் கூறும்போது, ''முதல் அணுஉலையில் உள்ள குளிர்விப்பானில் கசிவு இருப்‌பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அணுஉலை மூடப்பட்டது. இதனால், அணுக் கதிர்வீச்சு ஏதும் பரவவில்லை. குளிர்விப்பானுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை.

மேலும், இதனால் அணுமின் நிலைய ஊழியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஊழியர்கள் அனைவரும் உடனே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டனர். கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்களா என்பதை அறிய பரிசோதனை செய்யப்பட்டு, அதன் பிறகே அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்" என்றார்.

இந்திய அணுசக்திக் மின் கழகம் அதிகாரி கூறும்போது, ''கசிவு ஏற்பட்ட அணு உலை பாதுகாப்பாக மூடப்பட்டுவிட்டது. அணு கதிர்வீச்சு வெளியே கசியவில்லை. பாதுகாப்பு பரிசோதனை மற்றும் உபகரணங்கள் பரிசோதிக்க வேண்டி உள்ளதால், கக்ரபார் அணுமின் நிலையத்தில் அவசர நிலை பிரகடணம் செய்யப்பட்டுள்ளது. கசிவு ஏற்பட்ட அணு உலை குளிர்ச்சியடைய இன்னும் 24 மணிநேரம் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment