Monetize Your Website or Blog

Tuesday, 1 March 2016

என்ன இருந்தாலும் நம்ம ஊர் பஸ் மாதிரி வராது... சூரி தாயாரிடமிருந்து தெறிச்சு ஓடிய பைலட்!

டிகர் சூரி,  கிராமத்தில் பிறந்து வாழ்ந்தவர். ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டவர். ஏழ்மையான சாதாரண குடும்பத்தில் பிறந்த நடிகர் சூரி,  இன்று தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் காமெடி நடிகர்.
அவரது வங்கி பேலன்சும் தினமும் எகிறிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சூரியின் தாயார் இதுவரை விமானப் பயணம் மேற்கொண்டது இல்லை.நடிகர் சூரிக்கு தனது தாயாரை ஒரு நாளாவது விமானத்தில் அழைத்து சென்று விட வேண்டுமென்ற ஆசை. தனது தாயாரிடம் பேசி அவரை விமானத்தில் அழைத்து செல்ல முடிவு செய்தார்.
அதன்படி ஏற்பாடு செய்யப்பட்ட பயணத்தில் சூரியும் அவரது தாயாரும் விமானத்தில் அருகருகே அமர்ந்து   பயணம் மேற்கொண்டனர். அதனை புகைப்படமாக எடுத்து சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பயணத்தின் போது, ''அம்மா விமானப்பயணம் எப்படியிருக்கு?' னு சூரி கேட்க..., " என்ன இருந்தாலும் நம்ம ஊர் பஸ் போல வராதுப்பா..." னு பதில் வந்திருக்கு. அப்போது சூரியின் அருகில் நின்றிருந்த பைலட் தெறிச்சு ஓடிட்டாராம்!.
இதெல்லாம் சூரி ஸ்டேட்மெண்ட்தான்! 
 


No comments:

Post a Comment