Monetize Your Website or Blog

Saturday, 12 March 2016

'பறக்குதா பார் பறக்குதா பார் ' பட்சி பறக்க சி.பி.ஐ. செய்த உதவியை பார்!

நாட்டின் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 9 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் பாக்கி வைத்திருக்கும் விஜய் மல்லையா, நாட்டை விட்டு தப்புவதற்கு சி.பி.ஐ. அமைப்பே ஒரு வகையில் உதவியாக இருந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி சி.பி.ஐ தரப்பில் இருந்து,  நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் ஒரு தேடுதல் அறிவிக்கை அனுப்பப்பட்டது. அதில், ''விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு செல்லும் நோக்கத்துடன் வந்தால், அவரைத் தடுத்து காவலில் வைக்குமாறு ''குடியயேற்றத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்த அறிவிக்கையில் ஒரு மாதத்திற்கு பின் சி.பி.ஐ ஒரு மாற்றத்தை செய்தது. அக்டோபர் மாதம் வெளியிட்ட அறிவிக்கையில் இடம்பெற்றிருந்த,  'காவலில் வைக்குமாறு' என்ற வாசகத்தை சி.பி.ஐ நீக்கியது. அதற்கு பதிலாக விஜய் மல்லையாவின் பயணத்திட்டம் பற்றி மட்டும் தங்களுக்கு தெரிவிக்குமாறு தகவல் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. 
இந்நிலையில்தான் கடந்த புதன்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு,  டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில்,  7 பெரிய பேக்குகள் கொண்ட உடமைகளுடன் பெண் ஒருவருடன் முதல் வகுப்பில் அமர்ந்து விஜய் மல்லையா பயணித்துள்ளார்.  அவரை  தடுத்து நிறுத்தி காவலில் வைக்குமாறு என்ற வாசகம் மாற்றப்பட்டிருந்தால், விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு சென்ற சமயம் அவரை தடுக்க வேண்டிய குடியேற்றத்துறை அதிகாரிகள், வழியனுப்பி வைத்துவிட்டு 'பட்சி பறந்து விட்டது ' என்ற தகவலை மட்டும் சி.பி.ஐக்கு  அளித்து விட்டு அமைதியாக இருந்துள்ளனர். 


விஜய் மல்லையாவுக்கு வடக்கு லண்டனில் ஆடம்பர பங்களா உள்ளது. தற்போது அங்குதான் அவர் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சைக்குரிய பயணத்தை தவிர இதற்கு முன் 4 முறை வெளிநாட்டுக்கு விஜய் மல்லையா பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் டெல்லி சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

No comments:

Post a Comment