Monetize Your Website or Blog

Friday, 11 March 2016

தெறி அட்லீயின் அடுத்த அவதாரம், ஆச்சரியத்தில் திரையுலகம்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் படம் தெறி. ராஜாராணி படத்தைத் தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே விஜய்யை இயக்கிவிட்டார் அட்லி. 

தொடர்ந்து அட்லி ஒரு படம் ஒன்றையும் தயாரிக்கவுள்ளார். புதுமுக இயக்குநர் பழநி இயக்கவிருக்கும் படத்தில் ஜீவா, ஸ்ரீ திவ்யா, சூரி, இளவரசு ஆகியோர் நடிக்கவிருக்கும் படம் “ சங்கிலி புங்கிலி கதவ தொற”. பிரபலமான பாடல் வரிகளே ஜீவா, அட்லி படத்தின் டைட்டில்.

அட்லியின் தயாரிப்பு நிறுவனமான A For apple தான் இப்படத்தைத் தயாரிக்கிறது. மேலும் அட்லி சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இரண்டாவது படமே விஜய் படமாக அமைந்ததால் அட்லீயைப் பார்த்து ஆச்சரியப்பட்ட திரையுலகம், இரண்டாவது படம் வெளியாகும் முன்பே தயாரிப்பாளர் மற்றும் நடிகர் அவதாரம் எடுக்கவிருப்பதை எண்ணி மேலும் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறது.



No comments:

Post a Comment