Monetize Your Website or Blog

Saturday, 12 March 2016

இவரு தான் அவரா? இல்ல அவரு தான் இவரா? விஜயகாந்தின் அமெரிக்க வெர்ஷன்

தமிழகத்தில் அன்புமணி ராமதாஸ்,  தனது போஸ்டர்களில் ஒபாமாவின் ஹோப் பிரச்சாரத்தை காப்பி அடித்தார் எனக் கூறப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் ஒருவர் நம்ம ஊர் விஜயகாந்தை போலவே நடந்து கொள்கிறார் என்றால் நம்புவீர்களா?
தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க !
 
டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்  விஜயகாந்த்,  தொலைகாட்சி நிருபரை பார்த்து,  "தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க...!"  என்றது தாறுமாறு வைரல்.
  
பிரசாரத்தின் போது தொடர்ந்து கேள்விகளை கேட்ட யுனிவிஷன் நிருபரை உட்கார சொல்லி கொண்டே இருந்த ட்ரம்ப், பின்னர் உதவியாளரை அழைத்து,  அந்த நிருபரை யுனிவிஷனுக்கு திரும்ப போகச் சொன்னது ( Go back to Univision ), தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கவை ஞாபகப்படுத்தியது.

 
இரண்டு பேருமே 'த்தூ'!
 
சமீபத்தில் விஜயகாந்த்,  பத்திரிக்கையாளர் சந்திப்பில் 'த்தூ'  என துப்பி வரம்பு மீறி நடந்து கொண்டார். 
 அதேப்போன்று ட்ரம்ப் தனது பிரசாரத்தின் போது,  ஒரு பத்திரிக்கையாளரை இதேபோல் தரக்குறைவாக பேசி,  அவரைப் போல நடித்துக் காட்டி சர்ச்சைக்குள்ளானார்.

 அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. இதில் அதிபர் வேட்பாளர் போட்டியில் உள்ள டொனால்டு ட்ரம்ப்,  தனது பிரசாரங்களில் தேவையில்லாதா சர்ச்சைகளில் சிக்கி தனது ஆதரவை இழந்து வருகிறார். இவர் தேர்தல் பிரசாரத்தின்போது சொதப்பிய பல விஷயங்கள்,  நம் கேப்டன் விஜயகாந்தின் வேவ்லெங்த்துடன் செட் ஆகிறது. இருவருக்குமான கலாய் கலாட்டாக்கள் இதோ...
வீடியோ





No comments:

Post a Comment