Monetize Your Website or Blog

Friday, 15 April 2016

தெறி படத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டிய 11 காரணங்கள்!

இதோ ரசிகர்களின் ஆரவார ஆர்ப்பாட்டங்களுடன் தெறி வருகிற ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. இந்தப் படத்தை ஏன் பார்க்க வேண்டும்...இதோ 11 காரணங்கள்...
1. தமிழ் சினிமா மாஸ் ஹீரோ, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளம், உயிரையும் கொடுக்கும் வெறித்தனமான ரசிகர்களின் அன்புக்குச் சொந்தக்காரர். இதற்காகவே விஜய் படத்தை மிஸ் பண்ண முடியாது
2. விஜய் சொன்ன செல்ஃபி புள்ள சமந்தா, குல்ஃபி புள்ள எமி ஜாக்சன் யாரு செம ஆக்டிங், யாரு அழகு என பட்டிமன்றம் நடத்தவே படம் பார்க்கலாம்.
3. இரண்டாவது படமே ஒரு இயக்குநர் ஒரு மாஸ் ஹீரோவுக்கு கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளார் எனில் அப்படி என்ன கதையாக இருக்கும் இந்த க்யூரியாசிட்டிக்கு பதில் கிடைக்கவே படம் பார்க்க வேண்டும்
4. காமெடியன்கள் யாருமே இல்லாமல் மொட்ட ராஜேந்திரனுடன் விஜய் களமிறங்கியுள்ளார். அவர்கள் காம்பினேஷன் எப்படி எனப் பார்ப்பதற்கே படம் பார்க்கலாம்..
5. அப்போ ரஜினிக்கு மகளாக மீனா , இப்போது விஜய்க்கு மகளாக அவரது மகள் நைனிகா, அந்த க்யூட் ஏஞ்சலின் நடிப்பைப் பார்க்கவே படம் பார்க்க வேண்டும்
6. ஒரு விஜய் வந்தாலே ரசிகர்கள் ஆட்டம் காட்டுவார்கள், இதில் மூன்று விஜய் கேட்கவா வேண்டும் சும்மா வெறியாட்டம் காட்டுவார்கள். அந்த விழாவைக் காண வேண்டாமா?
7. இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இது 50வது படம்... அந்த இசைக்கு விஷுவல் எப்படி எனப் பார்த்தாக வேண்டுமே
8. ராஜாராணி எனும் வெற்றிப்படம் கொடுத்த அட்லிக்கு கைவந்த கலை ரொமான்ஸ் காட்சிகள், இதில் இரண்டு நாயகிகள் வேறு , கேட்கவா வேண்டும், அதற்கே டிக்கெட் போடலாம்.
9. தி லெஜண்ட் இயக்குநர் மகேந்திரன் வில்லனாக மாஸ் காட்டபோகிறார் ... அதைக் காணக் கண் கோடி வேண்டும். போடுங்க டிக்கெட்ட அதுக்காகவே! 
10. அதை விட முக்கியம் படம் பார்த்த வேகத்தில் அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் மாறி மாறி மீம்ஸ்களால் இணையத்தை நிறைப்பார்கள், அவற்றைப் புரிந்துகொள்ளவே நமக்கு ஒரு தனி மூளை வேண்டும் அதற்கு முதலில் படம் பார்த்தாக வேண்டும்.
11. இந்த காரணங்களையெல்லாம் கடந்து வாரத்துல எக்ஸ்ட்ரா ஒரு நாள் லீவு பாஸ்... புதுப் படம் ரிலீஸ் ... பார்த்தே ஆகணும்.... ஆங்..


No comments:

Post a Comment