எல்லோரும் தன்னை வேட்பாளராக கட்சி தலைமை அறிவிக்குமா என விருப்பமனுவுக்கு பணம் கட்டிவிட்டும், கட்டாமலும் தவம் கிடக்கும் நிலையில், தன் கட்சியால் ஒரத்தநாடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கபட்டும் அங்கு நான் போட்டியிட வில்லை என கூறி தி.மு.க. தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் எஸ்.எஸ்.ராஜ்குமார்.
தி.மு.க.வில் தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்கபட்டவுடன் மு.க.ஸ்டலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கருணாநிதியின் தேர்தல் பிரசார பயணமும் அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகளில் தி.மு.க. தொண்டர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறர்கள்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கபட்டவர் எஸ்.எஸ்.ராஜ்குமார். இவர், முன்னாள் மத்திய இணை அமைச்சரும் தஞ்சை மாவட்ட முன்னாள் செயலாளரான எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தின் உடன் பிறந்த தம்பி ஆவார். இவர் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை அங்கு வேறு யாரையாவது வேட்பாளராக நிறுத்திக் கொள்ளுங்கள் என தலைமையிடம் கூறி இருக்கிறார். தி.மு.க. தலைமையும், வேறு வேட்பாளரை அறிவிக்க உள்ள நிலையில் ராஜ்குமார் போட்டியிடாததன் பின்னணி என்ன என்று விசாரித்தோம்.
இது தொடர்பாக தி.மு.க. முக்கிய புள்ளிகள் சிலரிடம் பேசியபோது, ''பழனிமாணிக்கம் தம்பி ராஜ்குமார் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட தான் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு முன்னதாகவே தலைவர் கருணாநிதி தஞ்சை தொகுதிக்கான வேட்பாளரை உறுதி செய்திருந்தார். ஆனாலும், பழனிமாணிக்கம் தரப்பில் நமக்கு கிடைக்கு என நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் ராஜ்குமாருக்கு ஒரத்தநாடு தொகுதி அறிவிக்கபட்டது.
உடனே தி.மு.க.வினர் எல்லோரும் சால்வையும், மாலையுமாக வேட்பாளரை சந்திக்க சீனிவாசபுரத்தில் உள்ள அவரது வீட்டில்கூட தொடங்கினர். ஆனால், வேட்பாளருக்கான எந்த உற்ச்சாகமும் இல்லாமல் இருந்த ராஜ்குமார், வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களிடம் இன்னும் இரண்டு நாட்கள் பொருங்கள் என கூறினார். அப்போதே ஒரத்தநாட்டில் போட்டியிடுவதற்கு அவருக்கு விருப்பம் இல்லை என எங்களுக்கு புரிந்துவிட்டது.
ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட தனக்கு விருப்பம் இல்லை என்பதை அவர் தலைமையிடம் தெரிவிக்க, அதை எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்துவிடுங்கள் என தலைமையும் சொல்லி இருக்கிறது. இந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ.வான புல்லட் ராமச்சந்திரன் என்பவரை ஒரத்தநாடு தொகுதிக்கு வேட்பாளராக இன்றோ அல்லது நாளையோ தலைமை அறிவிக்கும்" என்றனர்.
இன்னும் சிலரோ, ''ஒரத்தநாட்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் அ.தி.மு.க. நால்வர் அணியில் உள்ள அமைச்சர் வைத்திலிங்கம். இவர் இந்த தொகுதியில் இதுவரை தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது அ.தி.மு.க. அவருக்கு 4வது முறையாக வாய்ப்பு அளித்துள்ளது. அவரை எதிர்த்து வெற்றி பெறுவது என்பது எளிதான காரியம் இல்லை.
மேலும், தி.மு.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகளே ராஜ்குமாருக்கு ஒத்துழைப்பு தருவார்களா என்ற சந்தேகமும் உள்ளது. அந்த அளவுக்கு இங்கே கோஷ்ட்டி பூசல் உச்சத்தில் உள்ளது. அதனாலும் ராஜ்குமார் போட்டியிட விரும்பவில்லை என்று தலைமையிடம் கூறி இருக்கலாம். தி.மு.க. வரலாற்றிலேயே வேட்பாளராக அறிவிக்கபட்ட ஒருவர் தான் போட்டியிடவில்லை என தலைமையிடம் கூறுவது இதுதான் முதல்முறையாக இருக்கும்.
சசிகலாவும், பழனிமாணிக்கமும் உறவினர்கள். இரண்டு குடும்பங்களையும், உறவு பாலங்கள் பலமாக இணைக்கிறது. பழனிமாணிக்கம், சசிகலாவை அத்தாச்சி என்றுதான் அழைப்பார். இதை அவர் வெளிப்படையாகவே கட்சிக்காரர்களிடமே சொல்வார்.
தி.மு.க.வில் தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்கபட்டவுடன் மு.க.ஸ்டலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கருணாநிதியின் தேர்தல் பிரசார பயணமும் அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகளில் தி.மு.க. தொண்டர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறர்கள்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கபட்டவர் எஸ்.எஸ்.ராஜ்குமார். இவர், முன்னாள் மத்திய இணை அமைச்சரும் தஞ்சை மாவட்ட முன்னாள் செயலாளரான எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தின் உடன் பிறந்த தம்பி ஆவார். இவர் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை அங்கு வேறு யாரையாவது வேட்பாளராக நிறுத்திக் கொள்ளுங்கள் என தலைமையிடம் கூறி இருக்கிறார். தி.மு.க. தலைமையும், வேறு வேட்பாளரை அறிவிக்க உள்ள நிலையில் ராஜ்குமார் போட்டியிடாததன் பின்னணி என்ன என்று விசாரித்தோம்.
இது தொடர்பாக தி.மு.க. முக்கிய புள்ளிகள் சிலரிடம் பேசியபோது, ''பழனிமாணிக்கம் தம்பி ராஜ்குமார் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட தான் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு முன்னதாகவே தலைவர் கருணாநிதி தஞ்சை தொகுதிக்கான வேட்பாளரை உறுதி செய்திருந்தார். ஆனாலும், பழனிமாணிக்கம் தரப்பில் நமக்கு கிடைக்கு என நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் ராஜ்குமாருக்கு ஒரத்தநாடு தொகுதி அறிவிக்கபட்டது.
உடனே தி.மு.க.வினர் எல்லோரும் சால்வையும், மாலையுமாக வேட்பாளரை சந்திக்க சீனிவாசபுரத்தில் உள்ள அவரது வீட்டில்கூட தொடங்கினர். ஆனால், வேட்பாளருக்கான எந்த உற்ச்சாகமும் இல்லாமல் இருந்த ராஜ்குமார், வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களிடம் இன்னும் இரண்டு நாட்கள் பொருங்கள் என கூறினார். அப்போதே ஒரத்தநாட்டில் போட்டியிடுவதற்கு அவருக்கு விருப்பம் இல்லை என எங்களுக்கு புரிந்துவிட்டது.ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட தனக்கு விருப்பம் இல்லை என்பதை அவர் தலைமையிடம் தெரிவிக்க, அதை எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்துவிடுங்கள் என தலைமையும் சொல்லி இருக்கிறது. இந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ.வான புல்லட் ராமச்சந்திரன் என்பவரை ஒரத்தநாடு தொகுதிக்கு வேட்பாளராக இன்றோ அல்லது நாளையோ தலைமை அறிவிக்கும்" என்றனர்.
இன்னும் சிலரோ, ''ஒரத்தநாட்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் அ.தி.மு.க. நால்வர் அணியில் உள்ள அமைச்சர் வைத்திலிங்கம். இவர் இந்த தொகுதியில் இதுவரை தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது அ.தி.மு.க. அவருக்கு 4வது முறையாக வாய்ப்பு அளித்துள்ளது. அவரை எதிர்த்து வெற்றி பெறுவது என்பது எளிதான காரியம் இல்லை.
மேலும், தி.மு.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகளே ராஜ்குமாருக்கு ஒத்துழைப்பு தருவார்களா என்ற சந்தேகமும் உள்ளது. அந்த அளவுக்கு இங்கே கோஷ்ட்டி பூசல் உச்சத்தில் உள்ளது. அதனாலும் ராஜ்குமார் போட்டியிட விரும்பவில்லை என்று தலைமையிடம் கூறி இருக்கலாம். தி.மு.க. வரலாற்றிலேயே வேட்பாளராக அறிவிக்கபட்ட ஒருவர் தான் போட்டியிடவில்லை என தலைமையிடம் கூறுவது இதுதான் முதல்முறையாக இருக்கும்.
சசிகலாவும், பழனிமாணிக்கமும் உறவினர்கள். இரண்டு குடும்பங்களையும், உறவு பாலங்கள் பலமாக இணைக்கிறது. பழனிமாணிக்கம், சசிகலாவை அத்தாச்சி என்றுதான் அழைப்பார். இதை அவர் வெளிப்படையாகவே கட்சிக்காரர்களிடமே சொல்வார்.
அது மட்டும் இல்லாமல், அவர் தம்பி ராஜ்குமாரும் சசிகலா அண்ணன் மகன் மகாதேவனும் சகலைகள். ஒரே குடும்பத்தில் அக்கா தங்கையை திருமணம் செய்திருக்கிறார்கள்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, பின்னாள் இருந்து கொண்டு யாரோ இவர்களை இயக்குவதுபோல் தான் தெரிகிறது. அதனால் தான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று தலைமையிடம் தெரிவித்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள நினைக்கிறார்.

பழனிமாணிக்கமும், ராஜ்குமாரும் அ.தி.மு.க.வுக்கு செல்ல போகிறார்கள் என்று கடந்த சில மாதங்களாகவே செய்திகள் அவ்வப்போது பரவி பின்னர் அடங்கிவிடும். அதற்கான வாய்ப்பாகவும் இது இருக்கலாம்" என்கின்றனர்.
ராஜ்குமார் தரப்போ, ''தஞ்சாவூர் தொகுதியை தான் அண்ணன் கேட்டார், அது கிடைக்கவில்லை. ஆனால் ஒரத்தநாடு தொகுதியை தலைமை ஒதுக்கியுள்ளது. அங்கே போட்டியிட அண்ணனுக்கு விருப்பம் இல்லை. அதை தலைமையிடமும் சொல்லிவிட்டார்.

மேலும், தலைமை அறிவிக்கும் எங்கள் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம். இந்த வதந்தியை அண்ணனுக்கு வேண்டப்படாதவர்கள் பரப்பி வருகின்றனர். கடைசி வரை எங்கள் அண்ணன் ராஜ்குமார் தி.மு.க.வில்தான் இருப்பார்" என்றனர்.

No comments:
Post a Comment