Monetize Your Website or Blog

Saturday, 16 April 2016

விஜயகாந்த் போட்டியா? உளுந்தூர்பேட்டை மீண்டும் திமுகவிற்கே போனதன் பின்னணி!

தி.மு.க. தலைமை,  தங்களது கூட்டணியில் இடம்பெற்றிருந்த மனித நேய மக்கள் கட்சிக்கு உளுந்தூர்பேட்டை, ராமநாதபுரம், நாகை, ஆம்பூர், தொண்டாமுத்தூர் ஆகிய ஐந்து இடங்களை ஒதுக்கியிருந்தது. ஆனால், இந்த முடிவுக்கு தி.மு.க. தொண்டர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. தி.மு.கவின் கோட்டையான உளுந்தூர்பேட்டையில்,  கட்சியில் கிளை அமைப்புகள் கூட இல்லாத ம.ம.கவிற்கு ஒதுக்குவதா என்று கொதித்தெழுந்தனர்.

விழுப்புரம் மாவட்டச் செயலாளரான பொன்முடிதான்,  தனது சுயநலத்திற்காக இந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுத்துவிட்டார் என்று சொல்லி,  தி.மு.க.வினர் பகிரங்கமாக போராட்டத்தில் குதித்தனர். மேலும் பொன்முடியின் உருவப் பொம்மையையும் தீ வைத்து எரித்தனர்.

இந்நிலையில், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாங்கள் ராமநாதபுரம், நாகை, ஆம்பூர், தொண்டாமுத்தூர் நான்கு தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறோம். உளுந்தூர்பேட்டைத் தொகுதியை மீண்டும் தி.மு.க.விற்கே வழங்கி விட்டோம்” என்று
 தெரிவித்து, நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே தி.மு.க தலைமை,  உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு திருநாவலூர் ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றியத் துணைச்சேர்மன் ஜி.ஆர்.வசந்தவேலுவை வேட்பாளராக அறிவித்திருக்கிறது.
”தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் நிற்க முடிவெடுத்திருக்கிறார். அதனால் அவரை வீழ்த்த வேண்டுமானால் வலிமையான தி.மு.க.வின் வேட்பாளர் அங்கு நின்றால்தான் சரியாக இருக்கும் என்று ஜவாஹிருல்லாவிடம் கேட்டிருக்கிறது தி.மு.க தலைமை. அதற்கு ஜவாஹிருல்லா ஓகே சொல்லிவிட்டதால்தான் இந்த உடனடி மாற்றமாம். அதனால்தான் வன்னியர்கள் நிறைந்த இந்தப் பகுதியில் வன்னியரை வேட்பாளராக அறிவித்திருக்கிறது தி.மு.க” என்று பின்னணி பாடுகின்றனர் விபரமறிந்தவர்கள்.

No comments:

Post a Comment