Monetize Your Website or Blog

Saturday, 16 April 2016

லட்சக்கணக்கில் பெருகிய அலையாத்தி..! ஒரு ஆராய்ச்சியும்... ஆச்சரியமும்...

தமிழகத்தில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற சுனாமி தாக்குதலை அடுத்து... 'அலையாத்திக் காடுகளைப்பெருக்க வேண்டும்’ என்கிற கோரிக்கை வலுவாக எழுந்ததுஇன்றுவரையிலும் அதை அரசாங்கம்கண்டு கொள்ளவே இல்லை.
ஆனால்இந்த சுனாமி தாக்குதலுக்கு முன்பாகவேஇம்மரங்களின் அருமையை உணர்ந்த ஒருதனிமனுஷிசீர்காழி பகுதி கடற்கரையோர கிராமத்தில் ஆயிரக்கணக்கில் அலையாத்தி மரங்களைநட்டு வைக்க... அதன் அருமையை உணர்ந்த இறால் பண்ணை உரிமையாளர் அலி உசேன்அந்தமரங்களை தொடர்ந்து நடவு செய்ய... இன்று லட்சக்கணக்கில் பெருகி நின்று... அப்பகுதியையேஅலையாத்தி வனமாக மாற்றி வைத்திருக்கின்றன அந்த மரங்கள்!
ஆங்கிலத்தில் 'மேங்ரோவ்என்றழைக்கப்படும் அலையாத்தி மரங்கள்பல நூறு ஆண்டுகளாக நம்நாட்டின் பல பாகங்களிலும் இருந்தனகுறிப்பாகதமிழக கடற்கரையோர கிராமங்கள் பலவற்றிலும்இவை தழைத்திருந்தனஆனால்காலப்போக்கில் அவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகஅழிக்கப்பட.... பிச்சாவரம்முத்துப்பேட்டை போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய பகுதிகளில்தான்தற்போது எஞ்சியிருக்கின்றனஇந்தப் பகுதிகள் மட்டும்தான் 'சுனாமிதாக்குதலின்போது தப்பிப்பிழைத்தன என்பது குறிப்பிடத்தக்கது!



இந்த உண்மையை முன்கூட்டியே அறிந்திருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவிதெய்வஆஸ்டின்ஸ்டான்லிபதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மேங்ரோவ் காடுகள் பற்றிய ஆய்வுப் படிப்புக்காகசீர்காழிப் பகுதிக்கு வந்தபோதுதான் அந்த மரங்களை நட்டுவைத்தார்.

கடற்கரை கிராமங்களில் ஒன்றான பெருந்தோட்டம் கிராமத்தில்,  அலி உசேனுக்கு சொந்தமான இறால்பண்ணையில்அவருடைய அனுமதியைப் பெற்றுஇறால் குட்டைகளின் கரைகளில் மரங்களை நடவுசெய்தார்பின்னர்தன்னுடைய வெவ்வேறு பணிகளில் கவனம் செலுத்தியவர்தற்போது இவர்,ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த மேங்ரோவ் காடுகள் மேலாண்மை ஆலோசகராகபர்மாவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில்சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்த ஸ்டான்லிதான் நடவு செய்தஅலையாத்தி மரங்கள் எப்படி இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்பெருந்தோட்டத்துக்கு வந்திருந்தார்அங்கே தற்போது லட்சக்கணக்கில் மரங்கள் பெருகியிருப்பதைப்பார்த்து ஆச்சரியம் அடைந்தவர்சந்தோஷ சங்கதியைப் பகிர்ந்து கொள்ள நமக்கு அழைப்பு வைத்தார்.உடனடியாக புறப்பட்டு பெருந்தோட்டம் சென்ற நாமும்ஆச்சரியத்தில் மூழ்கினோம்!
''1995-ம் ஆண்டு சதுப்பு நிலக்காடுகளைப் பற்றிகுறிப்பாக... மேங்ரோவ் காடுகளைப் பற்றிய ஆய்வைமேற்கொண்டேன்அப்போது பிச்சாவரத்தில் இருந்து சில கன்றுகளை எடுத்து வந்து இங்கே நடவுசெய்தேன்அதில் சில கன்றுகள் உயிர் பிழைத்தனஅந்த மண்ணில் அவை வளரும் என்பதுதெரிந்ததும்தொடர்ந்து அந்தக் கன்றுகளை நடவு செய்ய ஆரம்பித்தேன்கிட்டத்தட்டமூன்றாண்டுகளில் நூற்றுக்கணக்கான கன்றுகளை நடவு செய்தேன்அவற்றின் பலனைப்பார்த்துவிட்டுஅலி உசேனும் தொடர்ந்து நடவு செய்ய... தற்போது லட்சக்கணக்கில் மரங்கள் பல்கிப்பெருகியிருக்கின்றனமொத்தம் ஆறுவகை மரங்கள் இங்குள்ளன.
பொதுவாகஇறால் பண்ணை அமைத்தால்சுற்றுச்சூழல் சீர் கெடும்நிலங்கள் வீணாகி விடும்என்பார்கள். 'அக்கருத்தை மாற்ற முடியுமா?’ என்று யோசித்துதான்இறால் பண்ணையில்ஆய்வை மேற்கொண்டேன்ஓராண்டிலேயே பலன்கள் தெரிய ஆரம்பித்தனபொதுவாக,மழைக்காலங்களில் குட்டைகளின் கரைகள் கரைந்துநீர் கசியத் தொடங்கும்ஆனால்மேங்ரோவ்மரக்கன்றுகள் வேர் பிடித்து வளர ஆரம்பித்த பிறகு கரைகள் உடையவில்லைகசிவும் ஏற்படவில்லை.
குட்டைகளில் இருந்த அசுத்தங்களை மரங்கள் இழுத்துக் கொள்ள ஆரம்பித்தனமரங்களின் நிழலில்இறால்களும் நன்கு வளர்ந்தனபண்ணையில் உள்ள தண்ணீரை இக்குட்டைகளில் தேக்கி வைத்து,சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தோம்.

கடற்கரைகளில் இம்மரங்கள் இருந்தால்... கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கும்உதவுவதோடு... கடல் மாசுபடாமல்மீன்வளமும் பெருகுகிறதுஇது என்னுடைய ஆராய்ச்சியில்கிடைத்த முடிவு'' என்று பெருமை பொங்கச் சொன்னார் ஆஸ்டின் ஸ்டான்லி.

தொடர்ந்த அலி உசேன், ''நாங்கள் கன்றுகளை நடவு செய்ய ஆரம்பித்தபோது பலரும், 'இது வீண்வேலை’ என்று சொன்னார்கள்ஆனால்எங்களது முறையான பராமரிப்பினால் இந்த 250 ஏக்கர்பண்ணையில் தற்போது ஒரு லட்சம் மேங்ரோவ் மரங்கள் உள்ளனஇதனால் கடலில் மீன்வளமும்பெருகியிருக்கிறதுஇந்த மரங்களுடன் இறால் வளர்ப்பும் சேர்ந்து நடைபெறுவது இந்தியாவிலேயேஇங்கு மட்டும்தான்இதற்காக இந்திய விவசாய கவுன்சில் எங்களுக்கு விருது கொடுத்திருக்கிறது.கொஞ்சம் அக்கறையோடு இம்மரங்களை வளர்த்து வருவதால்தான்இருபது வருடங்களாக எந்தப்பிரச்னையும் இல்லாமல் பண்ணையை நடத்தி வருகிறோம்.

ஆண்டுதோறும் பண்ணையின் கரைகளைப் பலப்படுத்த வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை.மரங்கள் பெருகியிருப்பதால் பல வகையான பறவைகள் இங்கு நிரந்தரமாகத் தங்கியிருக்கின்றன.சுத்தமான காற்று கிடைக்கவும்இந்த மரங்கள் உதவுகின்றன'' என்று பெருமையோடு சொன்னார்.



No comments:

Post a Comment