வேலுாரில் நடந்த மக்கள் நலக் கூட்டணி பிரச்சாரத்தில் திமுக அதிமுக குறித்து விஜயகாந்த் கூறிய குட்டிக்கதையை பொதுமக்கள் ரசித்தனர்.
திருப்பத்தூரில் தே.மு.தி.க - ம.ந.கூ பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. நான்கு மணி கூட்டத்திற்கு விஜயகாந்த் இரவு 8.10 மணிக்கு வந்தார். அவரது தாமதத்தை டூப் விஜயகாந்த்தை பாட்டு பாட வைத்து சமாளித்தனர் கட்சி நிர்வாகிகள்.
8.10க்கு மேடையேறிய விஜயகாந்த் கூட்டத்தை பார்த்து பெரிய கும்பிடாக போட்டுவிட்டு மைக் பிடித்து காலதாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தார். ஆனால் இடையில் தொண்டர்களிடமிருந்து சத்தம் வர டென்ஷனானவர், “ எங்க கட்சி கட்டுபாடோட இருக்கு. கூட்டணி கட்சியும் அந்த கட்டுப்பாடோட நடந்துக்கனும்.” என்று முறைத்தார். பின்பு ஆசுவாசப்படுத்திக்கொண்டு குட்டிக் கதை சொல்லி தொடங்கினார்.
“ஒரு குரு தனது சீடர் 50 பேரிடம்...50 பேரோ 100 பேரோ. மாம்பழமோ என்னமோ ஒரு பழத்தை கொடுத்து மறைவான இடத்தில் சாப்பிட சொன்னார். அதுல ஒருத்தன் மட்டும் திரும்பி குருக்கிட்டயே வந்தான். ஏன் உனக்கு மறைவான இடம் கிடைக்கலயா எல்லாரும் இடம் புடிச்சிட்டாங்களான்னு கேட்டார். ’எப்படி மறைஞ்சு சாப்பிட முடியும் எல்லாத்தையும் மேலே இருக்கிறவன் பார்த்துக்கிட்டிருக்கானேனு’ அந்த பையன் சொன்னான். அது போல தி.மு.க., அ.தி.மு.க செய்யும் தவறுகளை மேல இருந்து பார்த்துக்கிட்டிருக்கான்“ என்றபோது ஜெயலலிதா பாணியில் விஜயகாந்த்தும் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டாரா என ஆச்சர்யப்பட்டனர் தொண்டர்கள்.

பொங்கலுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படும்.(ஏன் திடீர்னு இதை சொல்கிறார் கேப்டன்..பாவம் கேப்டனே கன்ஃப்யூஸ் ஆகிட்டார் என்று கூட்டத்திலிருந்து கமெண்ட்) திமுக,அண்ணா.திமுகவிற்கு முடிவுரை எழுதப்பட வேண்டும். எழுதுவீங்களா?
இந்த அம்மா ஹெலிகாப்டரில் உச்சி வெயில் 1 மணிக்கு வந்து ஏர்கூலரில் உட்கார்ந்துகிட்டு ‘உங்களால் நான். உங்ளுக்காக நான், தமிழ்நாட்டை தலை நிமிரசெய்வேன்னு’ பேசுறாங்க. முதலில் உங்க கட்சிகாரங் களை தலைநிமிர சொல்லுங்கள். ஒரு மணி கூட்டத்துக்கு 11 மணிக்கே நூறுக்கும்.. பீருக்கும்..சோறுக்கும் கூட்டத்தை அழைச்சிட்டு வராங்க இவங்களுக்கு ஒட்டு போடனுமா. நீங்க எதுக்கு ஓட்டு போடனும் சொல்லுங்க?” என்று கூட்டத்தை பார்த்து கேட்டவர். “கூட்டணி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வைகோ. அவர் சின்னம் பம்பரம்.இடது கம்யூனிஸ்ட் வலது கம்யூனிஸ்ட்(!) அவங்க பேர் என்ன?” ( மைண்ட் வாய்ஸ் என நினைத்துக்கொண்டு மைக்கிலே கேட்கிறார்), சுதாரித்து கொண்டு “அடுத்து சின்னய்யா ஜி.கே.வாசன் அவருக்கு தென்னந்தோப்பு சின்னம். எங்களுக்கு கொட்டும் முரசு.” என்றவர், ‘கொட்டும் முரசே... அரசு’ என பாட்டு பாடி அந்தந்த சின்னத்தில் ஓட்டு போடுங்க. திரும்ப லேட்டா வந்ததுக்கு மன்னிக்கனும்.” என்று பேச்சை முடித்துக்கொண்டு அடுத்த கூட்டத்திற்கு அவசர அவசரமாக புறப்பட்டார்.

No comments:
Post a Comment