Monetize Your Website or Blog

Saturday, 16 April 2016

'கூட்டு மரங்களால் கூடுதல் லாபம்!''

புயல் கடந்த பூமிக்கு... பொன்னான யோசனைகள்...


தானே’ புயலின் கோர தாண்டவத்தால்கடலூர் மாவட்டத்தில் பலத்த சேதத்துக்குள்ளாகிக்கிடக்கின்றன பலாமுந்திரி மரங்கள்தப்பிப் பிழைத்திருக்கும் மரங்களைக் காப்பாற்றத் துடித்துக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக இயற்கை விவசாயவல்லுநர்கள் மூன்று பேரை 'பசுமை டாக்டர்'களாக அந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றது 'பசுமைவிகடன்'. மரங்களுக்குச் செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்துஅந்த மூவரும் விவசாயிகளுக்குநேரடியாக தந்த ஆலோசனைகளை 'தண்ணீரைத் தேக்கினால்... தாராள விளைச்சல்!' என்ற தலைப்பில்கடந்த இதழில் வெளியிட்டிருந்தோம்மேற்கொண்டு... மரங்களைத் தொடர்ந்து பராமரிப்பதுபுதியகன்றுகளை நடுவதுஇயற்கை முறையிலேயே பராமரித்து நல்ல லாபத்தை ஈட்டுவது தொடர்பாக, 'பசுமை டாக்டர்'கள் மூவரும் தந்த ஆலோசனைகள் இங்கே இடம் பிடிக்கின்றன...
குருணை மருந்து கூடாது !
ஐம்பது ஆண்டுகளாக முந்திரி சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் புதுக்கோட்டை மாவட்டம்குரும்பூர்கிராமத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம்முத்தாண்டிக்குப்பம் ராதாகிருஷ்ணன் தோட்டத்தில் கூடியிருந்தமுந்திரி விவசாயிகளுக்குச் சொன்ன ஆலோசனைகளைப் பாடமாகவே தொகுத்திருக்கிறோம்அவை- 'கோடைக் காலத்தில் முந்திரிச் செடிகளை நடவு செய்யக் கூடாதுமழை கிடைக்கும் மாதங்களான ஆடி,ஆவணிதான் நடவுக்கு ஏற்றவைரசாயன விவசாயம் செய்யும் விவசாயிகள்நடவின்போது குருணைமருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள்அதனால்மண்ணில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும்நுண்ணுயிர்கள் இறந்து விடுகின்றனஇது மகசூலை பாதிக்கும்எனவேகுருணை மருந்தைத்தவிர்த்துவிட வேண்டும்.

நடவு செய்யும் குழிகளில்தலா 2 கிலோ மண்புழு உரம் அல்லது ஒரு கூடை தொழுவுரம் இட்டு சிறியசருகுகள்சின்னச்சின்ன குச்சிகளைப் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு மாதம் வரை ஆறவிட வேண்டும்.பிறகுஒவ்வொரு குழியிலும் 100 கிராம் வேப்பங்கொட்டைத் தூள் இட்டு முந்திரிக் கன்றுகளை நடவுசெய்ய வேண்டும்.
12 அடி இடைவெளி !
முந்திரியைப் பொறுத்தவரை நாட்டுச்செடிகளைவிடஒட்டுச் செடிகள்தான் நன்கு காய்க்கின்றன.அதனால்ஒட்டுச் செடிகளைத் தேர்வு செய்வது நல்லதுஏற்கெனவே உள்ள மரங்களுக்கு இடையே 10அடி இடைவெளி கொடுத்துத்தான் கன்றுகளை நடவு செய்ய வேண்டும்புதிதாக நடவு செய்வதாகஇருந்தால், 12 அடி இடைவெளி தேவைஒட்டு முந்திரிமூன்று அல்லது நான்கு வருடங்களில்காய்ப்புக்கு வந்து விடும்ஆனால்மரங்கள் நன்கு நெருக்கமாக வளர்ந்து அதிகளவில் காய்க்க,கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகிவிடும்அதுவரை கிடைக்கிற மகசூலை எடுத்துக் கொண்டுபூச்சிகளால்தாக்கப்படும் மரங்கள்சரியாகக் காய்க்காத மரங்கள்... அனைத்தையும் கழித்துவிட வேண்டும்.

கூட்டு மரங்களால் கூடுதல் லாபம் !
முழுக்க முந்திரி மரங்களை மட்டும் நம்பி இருக்காமல்அவற்றுக்கு இடையில் வேம்புதேக்கு,வேங்கைசெம்மரம் (செஞ்சந்தனம்போன்ற மரங்களை நடலாம். 20 வருடங்கள் கழித்துஒருசெம்மரம்ரூபாய் 1 லட்சத்துக்கு விலை போகும்மற்ற ஒவ்வொரு மரமும் 20 வருடங்களில் 10ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் விற்பனையாகும்.
கடலூர் மாவட்டம் வறட்சிப் பகுதியாக இருந்தாலும்பெரும்பாலும் யாரும் மழைத் தண்ணீரைத் தேக்கிவைப்பதில்லைஐம்பதடி இடைவெளியில் வரிசையாக வரப்பு கட்டிமழை நீரைத் தடுத்துத் தேக்கிவைக்கலாம்அதனால்நிலத்தடி நீர் பெருகுவதோடுமரங்களின் விளைச்சலும் அதிகமாகும்.
மாதம் ஒருமுறை, 100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் அமுதக்கரைசலைக் கலந்து தெளித்துவிடவேண்டும்நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இதேபோல பஞ்சகவ்யாவையும் தெளித்துவிடவேண்டும்இதனால்பூச்சித்தாக்குதல் குறைவதோடுகாய்ப்பும் அதிகரிக்கும்வருடத்துக்கு ஒரு முறைதொழுவுரம் வைக்க வேண்டும்.
காற்றைத் தடுக்க மூங்கில் !
வரும்காலங்களில் புயல் பாதிப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விவசாயிகள்எடுக்க வேண்டும்முதலில் காற்றைத் தடுக்கும் வேலிகளை அமைக்க வேண்டும்தோட்டத்தின் வேலிஓரத்தில் முள்ளில்லா மூங்கில் கன்றுகளை
அடி இடைவெளியில நடவு செய்ய வேண்டும்இது காற்றைத் தடுத்து விடும்ஐந்தாண்டுகளில்மூங்கில் மூலமாகவும் வருமானம் கிடைக்கும்.'

சுள்ளிக் குச்சிகள் சிறந்த உரம் !
ஞானப்பிரகாசத்தைத் தொடர்ந்து பேசிய மதுரைஇயற்கை விவசாய ஆலோசகர் செந்தில்நாயகம், ''இயற்கை உரத்தை இன்னொரு வழி மூலமாவும் முந்திரிக்குக் கொடுக்கலாம்ஒவ்வொரு மரத்துலஇருந்தும் 5 அடி இடைவெளியில் 5 அடி நீளம், 3 அடி அகலம், 2 அடி ஆழம்கிற கணக்குல குழி எடுத்து,அரையடி உயரத்துக்கு சுள்ளி... அதுக்கு மேல கலவை எருனு மாத்தி மாத்தி போட்டு நிரப்பணும்(தொழுவுரம் - 100 கிலோஊற வைத்த கடலைப்பிண்ணாக்கு-
கிலோதயிர்-2 லிட்டர்நாட்டுச் சர்க்கரை-அரை கிலோஇதையெல்லாம், 5 லிட்டர் தண்ணீர் விட்டுகலந்து, 3 நாட்கள் நிழல்ல குவிச்சு வெச்சுட்டா... கலவை எரு தயார்இந்த எருவைபகிர்ந்து ஒவ்வொருகுழிக்கும் பயன்படுத்திக்கலாம்). குழி மேல பதினஞ்சு நாளைக்கு ஒரு தடவை தண்ணி தெளிச்சுக்கிட்டேவந்தாமூணு மாசத்துக்குள்ள நல்லா மட்கு உரமாயிடும்அந்தச் சத்துக்களை அப்படியே மரம்எடுத்துக்கும்மரத்தைச் சுத்தி பள்ளம் பறிச்சும் இந்த மட்கைப் போடலாம்'' என்றவர்,
''புயல் காத்துல இருந்து முந்திரியைக் காப்பாத்த... மூங்கில் மரங்களை நடச் சொன்னார்ஞானப்பிரகாசம் ஐயாஅதேபோல வேலி ஓரங்கள்ல பனைபரம்பை முள்கலாக்காய்,நாட்டுக்கருவேல்வெள்ளைக்கருவேல்... மாதிரியான மரங்களையும் முக்கோண முறையில்வளர்க்கலாம்'' என்றும் தன் பங்குக்கு ஆலோசனை தந்தார் செந்தில்நாயகம்.

கடலூர் மாவட்டத்தின் சாநெல்லித்தோப்பு கிராமத்தில்பலா மரங்களைக் காப்பாற்றுவதற்காக,இயற்கை முறையில் பலா சாகுபடி செய்து வரும் சிவகங்கை மாவட்டம்கல்லுவளி கிராமத்தைச்சேர்ந்த ஆபிரகாம் நிறைய யோசனைகள் தந்தார்அவைகடந்த இதழில் இடம்பிடித்தன.மேற்கொண்டும் பேசிய ஆபிரகாம், ''பொதுவாபலா மரத்துல நோய் அதிகமா தாக்காதுபிஞ்சுபருவத்துல காய்ப்பூச்சி தாக்கறதுக்கு வாய்ப்பிருக்குரெண்டு லிட்டர் தண்ணியில ஐம்பது கிராம்வேப்பம்பிண்ணாக்கை நல்லா ஊற வெச்சுத் தெளிச்சாகாய்ப்பூச்சியைக் கட்டுப்படுத்திடலாம்காப்பர்சத்து குறைஞ்சாமரத்துல பூஞ்சணம் தென்படும்அப்படி இருந்தாமரத்தை சுத்திதுத்திச் செடியைவளர்த்து மடக்கி உழுதுட்டா சரியாகிடும்'' என்று இயற்கைத் தீர்வையும் சொல்லிவிவசாயிகளுக்குநம்பிக்கை ஊட்டினார்.
பசுமைக்கு நன்றி !
அனைத்து ஆலோசனைகளையும் கேட்டு முடித்தபின் முத்தாண்டிக்குப்பம் விவசாயிகளின் சார்பாகநம்மிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ''தக்க சமயத்துல வல்லுநர்களை அழைச்சிட்டு வந்து எங்களுக்குஆலோசனை கொடுத்திருக்கீங்கஇந்த ஆலோசனைகள் எங்களை கண்டிப்பா கைத்தூக்கி விடும்னுநம்புறோம்இந்தத் தொழில்நுட்பங்களை உடனடியா செஞ்சு பாக்கிறோம்எங்களோட பிரச்னையைப்புரிஞ்சுக்கிட்டுஎங்களைத் தேடி வந்து ஆலோசனை கொடுத்த பசுமை விகடனுக்கு நன்றி'’ என்றுநெகிழ்ச்சியுடன் சொன்னார்.
சா.நெல்லித்தோப்பு விவசாயிகளின் சார்பாகப் பேசிய சந்திரன்முத்தையா இருவரும்... ''உரம்,பூச்சிக்கொல்லி இல்லாமலே எப்படி பலா சாகுபடி செய்யலாம்னு விளக்கமா தெரிஞ்சுக்கிட்டோம்.உடனடியா தண்ணீர் பாய்ச்சி பலா மரங்களைக் காப்பாத்துறதுதான் முதல் வேலைஎங்க மேலஅக்கறையோட ஆலோசனை சொன்ன ஐயாங்களுக்கும்அவங்கள அழைச்சுக்கிட்டு வந்த பசுமைவிகடனுக்கும் நாங்க நன்றிக்கடன் பட்டிருக்கோம்'' என்றனர்உருகியபடியே!

தொடர்புக்கு,

ஞானப்பிரகாசம்,தொலைபேசி: 94428 57292.செந்தில்நாயகம்செல்போன்: 99651-82001.ஆபிரகாம்செல்போன்: 98431-85444.விவசாயிகள்ராதகிருஷ்ணன் (முந்திரிசெல்போன்: 99768-08844.சந்திரன் (பலாசெல்போன்: 95514-43667.முத்தையா (பலாசெல்போன்: 98423-86413.


No comments:

Post a Comment