மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபின் ஊழல் செய்துள்ள ஓ.பி.எஸ் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்களுக்கு நிரந்தர ஜெயில் கிடைக்க வழிசெய்வோம் என்று பிரேமலதா பேசினார்.
போடியில் தே.மு.தி.க- மக்கள் நலக்கூட்டணி வேட்பாளருக்கு பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “போடித் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக, நம்மை எதிர்த்து போட்டியிடும் யு.பி.எஸ்” என்று நிறுத்தியவர், “ஆமாம் அவர் பெயர் ஓ.பி.எஸ் இல்லை, யு.பி.எஸ்” என்றார். பின்பு அதற்கு விளக்கமளித்த பிரேமலதா, “அம்மா ஜெயிலுக்கு போனால், இந்த யுபிஎஸ் 'ஆன்' ஆகும், அம்மா வெளியே வந்தவுடன் 'ஆஃப்' ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த மணல்கொள்ளைக்கும் தலைவர் யார் தெரியுமா? ஓ.பி.எஸ் அவர் தம்பி ராஜாவும் தான். மக்கள் பணத்தில் ஊழல் செய்கின்ற, மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கின்ற ஓ.பி.எஸ் போன்றோருக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிரந்தர ஜெயில் கிடைக்கும்"என்றார்.

இதுவரை 110 விதியில் 824 அறிவிப்புகள் அறிவித்துள்ள ஜெ. அதில் இதுவரை ஒரு திட்டங்கள் கூட செயல்படுத்தவில்லை. “மக்களுக்காக நான் மக்களால் நான்” “உங்களுக்காத்தான் நான்” என்றெல்லாம் சினிமா டயலாக் பேசும் ஜெயலலிதாவிற்கு மக்கள் மீது துளி கூட அக்கறை கிடையாது. அப்படி உங்களுக்காகத்தான் நான் என்று கூறும் ஜெயலலிதாவை மக்களோடு மக்களாக சிறிது நேரம் வெயில்ல நிக்க சொல்லுங்க பார்க்கலாம்.
ஜெயலலிதாவிற்கு எப்படி தெரியும் மக்கள் கஷ்டம், பிரச்சாரம் என்ற பெயரில் மக்களை, கூண்டில் அடைத்து, வெயில்ல தண்ணீர் கூட இல்லாமல், மக்களை பிரச்சாரக் கூட்டத்தில் இருந்து வெளியிலும் விடாமல் அடைத்து வைத்து மக்களை சாகடிக்கிறார். மீட்டிங் நடத்த சுமார் 10 கோடி செலவு செய்யும் ஜெ, உண்மையாக மக்களைப் பற்றி சிந்திக்கிறார் என்றால் இன்னும் ஒரு 2 கோடி செலவு செய்து மக்களுக்காவும் பந்தல் அமைக்கலாமே?” என சாடினார் பிரேமலதா.

No comments:
Post a Comment