Monetize Your Website or Blog

Wednesday, 27 April 2016

அப்போ ரஜினி சொன்னதை இப்போ ஜி.கே.வாசன் சொல்றார்...!

வரும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலைத் தவறவிட்டால் தமிழகத்தை ஆண்டவனே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

தேனி மாவட்டத்தில், தே.மு.தி.க. - த.மா.கா மற்றும் மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆண்டிபட்டி, தேனி அல்லிநகரம், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். 




தேனி அல்லிநகரத்தில் பிரசாரம் செய்த ஜி.கே.வாசன் பேசுகையில், 

"தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் அ.தி.மு.க., தி.மு.க.வை மாற்றக்கூடிய வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அ.தி.மு.க., தி.மு.க. மக்களை விலைக்கி வாங்கி வரி பணத்தை சுரண்டுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். தமிழக மக்களுக்கு எளிமையான, தூய்மையான, வெளிப்படையான ஆட்சி தான் தேவை. மக்கள் ஆட்சியை தருபவர்கள் தான் எங்கள் கூட்டணி தலைவர்கள். எங்கள் கூட்டணி தலைவர்கள் அப்பழுக்கு அற்றவர்கள்.

தமிழகத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும். அதனால் ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றிக் காட்டுகிறோம். தமிழகத்தில் மதுவை ஒழிக்க அ.தி.மு.க., தி.மு.க.வினால் முடியாது. இதனை நல்லவர்கள் தான் செய்ய முடியும்.


இந்த தேர்தல் வாய்ப்பை தவற விட்டால் ஆண்டவனே நினைத்தால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது. அதனால் எங்கள் கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள்" என்று தெரிவித்தார்


No comments:

Post a Comment