Monetize Your Website or Blog

Saturday, 16 April 2016

'கிராமங்களின் சிரிப்புதான் வல்லரசுக்கான சின்னம்..

' சாதனைப் பயணத்தில் லட்சிய இளைஞர்கள்!

கிராமப்புறங்களில்தான் இந்தியாவின் ஆன்மா குடி கொண்டு இருக்கிறது’ என்பதுஅண்ணல்காந்தியடிகளின் அற்புத வரிகள்ஆனால்அந்த ஆன்மாவை சிதைத்துச் சீரழித்து விட்டன,உலகமயமாக்கல்நகரமயமாக்கல்... போன்ற நரகாசுரத் திட்டங்கள்விளைவு... வாழ்வாதாரத்தைப்பறிகொடுத்த கிராமப்புற இளைஞர்கள்நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளனர்இதன்அடுத்தக்கட்ட விளைவாகவிவசாயம் கேள்விக்குறியாகிக் கொண்டுள்ளது!
இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்பாரத ஸ்டேட் வங்கி-எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு மையம் ஆகியவை இணைந்து 'இந்தியாவுக்காக இளைஞர்கள்’ என்கிற பெயரில்கிராமங்களில் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.

அதைப் பற்றிப் பேசிய எம்.எஸ்சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த முனைவர் ஹரிஹரன், ''பல்வேறு தளங்களில் பணிபுரிந்து வரும் இளைஞர்களுக்குஅவர்களின் துறைசார்ந்த அறிவுஅபரிமிதமாக இருக்கும்அத்தகையத் திறமையை கிராமப்புற முன்னேற்றத்துக்குப்பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் உருவானதுதான் இந்தத்திட்டம்.
'கிராமங்களில் தங்கி பணியாற்ற விருப்பமுள்ள இளைஞர்கள் தேவைஎன அறிவித்தோம்கிட்டத்தட்டஇரண்டாயிரத்து ஐநூறுக்குக்கும் மேற்பட்டவர்கள் மனு செய்திருந்தனர்

அவர்களைப் பல்வேறு தேர்வுகளுக்கு உட்படுத்தி... இறுதியாக, 32 இளைஞர்களைத் தேர்வு செய்தோம்.இவர்கள் அனைவரும் பல்வேறு நிறுவனங்களில் உயரிய பதவிகளில் இருந்தவர்கள்இங்கே,அவர்களுக்கு தரப்படும் ஊக்கத்தொகை வெறும் 12 ஆயிரம் ரூபாய்தான்ஆனாலும்தங்கள் துறைரீதியான அறிவை ஊரக வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் முனைப்புதான் அவர்களை இங்கேவரவழைத்திருக்கிறதுதற்போது திருவாரூர்நாகப்பட்டினம்புதுச்சேரிவிதர்பா என பல்வேறுபகுதிகளில் இந்த இளைஞர்கள் சேவையாற்றுகிறார்கள்'' என்று அவர் சொன்னதைக் கேட்டுஆச்சரியத்தில் ஆழ்ந்த நாம்அந்த இளைஞர்கள் சிலரிடமும் பேசினோம்.

புதுசேரி பகுதியில் களப்பணியாற்றி வருகிறார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணினிப் பொறியியல்பட்டதாரி சுஹாசினி. ''என்னுடைய பணியை ஏழைகள் நலன்பெண்கள் நலன் சார்ந்ததாகவும்அமைத்துக் கொண்டுள்ளேன்பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களோடும், 'இன்னுயிர்’ கிராமசங்கத்தோடும் இணைந்து மண்புழு உரம் தயாரித்தல்பால் உற்பத்திகாளான் வளர்ப்புகால்நடைத்தீவனம் தயாரிப்பு... என இயற்கை விவசாயம் சார்ந்த பல துறைகளில் பயிற்சி அளிக்கிறோம்.
பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அதிக செலவின்றி விளம்பரப்படுத்தும் முயற்சிகள்,ஆங்கிலம் கற்றுத்தருவதுவங்கிக் கடன் வாங்கும் நடைமுறைகள்... போன்றவற்றை பெண்களுக்குக்கற்றுத் தருகிறேன்இதனால்அற்புதமான மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதைப் பார்க்கும் போது மனம்நிறைவாக இருக்கிறதுபணத்தைவிட ஆத்ம திருப்திதானே முக்கியம்'' என்கிறார் சுஹாசினி.

''பருவநிலை மாற்றம் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்னைஇதைப் பற்றி உலகளவில் பேசும் நாம்,அடித்தட்டு மக்களுக்குப் புரிய வைக்கத் தவறிவிட்டோம்தவறான அணுகுமுறைகளால்எப்படியெல்லாம் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பதை விவசாயிகளுக்குப் புரிய வைக்கிறேன்.இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தல்டீசல் படகுகளின் பயன்பாட்டைக் குறைத்தல்உப்பு நீர்ஊடுருவலை எதிர்கொள்ள உதவுதல்... என பல்வேறு வகையில் பயிற்சி கொடுத்து இங்குள்ளமக்களுக்கு உதவி வருகிறேன்'' என்கிறார்வேதாரண்யம் பகுதியில் பணியாற்றும் எம்.பி..பட்டதாரியான கார்த்திகேயன்.

திருவாரூர் பகுதியில் பணியாற்றி வரும் புதுடெல்லியைச் சேர்ந்த அன்கித் வாலியா, ''வெப்பநிலை,பருவநிலை மாற்றம்அன்றாட விலை நிலவரம்... போன்றவற்றை அலைபேசி மூலமாகவிவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்கும் தொழில்நுட்பத்தைப் பரவலாக்கும் பணியை செய்துவருகிறேன்மேலும்பல்வேறு விவசாய உபகரணங்களைக் குறைந்த விலையில் தயாரித்து வழங்கும்ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறேன். 'கிராமங்களின் சிரிப்புதானே உண்மையான வல்லரசுக்கானசின்னம்’ சரிதானே..!'' என்று கேட்கிறார் சிரித்தபடியே!


பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு படிப்பைத் தேர்ந்தெடுத்து வரும் இளைஞர்கள்மத்தியில்... இந்த லட்சிய இளைஞர்கள் கண்டிப்பாகப் பாராட்டப்பட வேண்டியவர்களேஇவர்களைப்பார்த்து இன்னும் பல இளைஞர்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற ஆர்வத்துடன் தற்போது,முன்வந்திருக்கிறார்கள்அதுதான் இந்தத் திட்டத்துக்குக் கிடைத்த வெற்றி!

No comments:

Post a Comment