கோவையில் இன்று காலை நடந்த வாகன சோதனையின் போது கர்நாடக மாநில பேருந்தில் டிராவல் பேக் மூலம் கொண்டு வரப்பட்ட ரூ.1.35 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. முறையான ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை வருமான வரித்துறையில் ஓப்படைத்தனர்.
கோவை காந்திபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று அதிகாலை வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடுக்கு சென்ற கர்நாடக மாநில அரசு பேருந்தில் அதிகாரிகள் சோதனையிட்டனர். பயணிகளின் உடமைகளை சோதனையிட்ட போது 3 டிராவல் பேக்குகளில் 1.35 கோடி பணம் இருப்பது தெரியவந்தது.
பணத்தை கொண்டு வந்த தன்லப் மற்றும் அஸ்ரப் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்ட போது முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாதது தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கோவை தெற்கு சட்டமன்ற தேர்தல் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். 10 லட்சத்துக்கு மேல் ஆவணங்கள் இன்றி பணம் பறிமுதல் செய்தால் வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருப்பதால் கைப்பற்றப்பட்ட பணத்தை வருமான வரித்துறையில் ஒப்படைத்தனர்.
பணத்தை கொண்டு வந்தவர்கள் தாங்கள் தங்க நகை வியாபாரிகள் எனவும் கர்நாடக மாநிலத்தில் நகை விற்பனை செய்த பணம் இது எனவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கநகை வியாபாரி யூசூப் என்பவர் இந்த பணத்தின் உரிமையாளர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாகன சோதனையில் 1.35 கோடி பணம் கைப்பற்றப்பட்டு இருப்பது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதே போன்று ஆம்னி பேருந்துகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

No comments:
Post a Comment