சட்டமன்றத் தேர்தலில் பா.ம.கவுக்கு எதிராக ஜெயலலிதா அமைத்திருக்கும் வியூகத்தைப் பார்த்து விக்கித்து நிற்கிறார்கள் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள். 'அன்புமணியை டெபாசிட் இழக்கச் செய்வது அ.தி.மு.கவின் முக்கிய அசைன்மெண்டுகளில் ஒன்று' என்கின்றனர் தருமபுரி அ.தி.மு.கவினர். சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுபோன்ற நெருக்கடியை ராமதாஸ் இதுவரையில் சந்தித்ததில்லை. அவரோடு நட்பு பாராட்டிக் கொண்டிருந்த பாரிவேந்தர், தேவநாதன், கொங்கு நாகராஜ் உள்ளிட்டோர் பா.ஜ.க அணியில் நிற்கிறார்கள்.
'அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்ட 12 அமைப்புகள்' என அவர் சுட்டிக் காட்டிய ஒருவரும் ராமதாஸ் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் வன்னியர் பலத்தைக் காட்டி கூடுதல் இடங்களை வாங்கிக் கொண்ட ராமதாஸ், தற்போது யாருமற்று தனித்துவிடப்பட்டிருக்கிறார்.
"இது மட்டுமே அவருக்குப் போதாது. இந்தத் தேர்தலோடு பா.ம.க என்ற கட்சியே கரைந்து போக வேண்டும். பா.ம.கவின் வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும். குறிப்பாக, பெண்ணாகரத்தில் அன்புமணி போட்டியிடலாம் என்பதால், அங்கு அவரை படுதோல்வியடையச் செய்ய வேண்டும்" என அ.தி.மு.க தலைமை அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.
இதுபற்றி நம்மிடம் விரிவாகப் பேசிய தருமபுரி மாவட்ட சீனியர் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், " இந்தத் தேர்தலோடு பா.ம.க முழுமையாகத் துடைக்கப்பட்டுவிடும். அந்தளவுக்கு நாங்கள் வியூகம் அமைத்து வருகிறோம். வேட்பாளர்களை நிறுத்துவதில் பா.ம.கவுக்கு அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் நெருக்கடி கொடுத்தாலும், நாங்கள்தான் வீரியமாக களமிறங்குகிறோம். 'வன்னியர்கள் எல்லாம் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்' என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, வன்னியர் அல்லாதோரின் வாக்குகளையும் கவர வேண்டும் என்பதுதான் பா.ம.கவின் திட்டம்.
இதுபற்றி நம்மிடம் விரிவாகப் பேசிய தருமபுரி மாவட்ட சீனியர் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், " இந்தத் தேர்தலோடு பா.ம.க முழுமையாகத் துடைக்கப்பட்டுவிடும். அந்தளவுக்கு நாங்கள் வியூகம் அமைத்து வருகிறோம். வேட்பாளர்களை நிறுத்துவதில் பா.ம.கவுக்கு அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் நெருக்கடி கொடுத்தாலும், நாங்கள்தான் வீரியமாக களமிறங்குகிறோம். 'வன்னியர்கள் எல்லாம் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்' என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, வன்னியர் அல்லாதோரின் வாக்குகளையும் கவர வேண்டும் என்பதுதான் பா.ம.கவின் திட்டம்.
ஆனால், வன்னியர் அல்லாதவர்களின் ஓட்டுக்களை ராமதாஸ் கவர நினைப்பது பற்றி அம்மாவுக்கு எந்தக் கவலையும் இல்லை. பொதுவான கட்சி என அவர்கள் தோற்றம் கொடுத்தாலும், அதை நம்புவதற்கு மற்ற சமூகத்தினர் தயாராக இல்லை என்பது ராமதாஸுக்கும் தெரியும். தவிர, பா.ம.கவுக்கு இது ஒன்றும் புதிது அல்ல. 91-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் மாற்று சமூகத்து வேட்பாளர்களை ராமதாஸ் நிறுத்தினார். 96-ம் ஆண்டு நான்கு எம்.எல்.ஏ சீட் ஜெயித்தபோதும், வன்னியர் அல்லாத வேட்பாளர்களை நிறுத்தினார். அதனால் கிடைத்த விளைவுகளையும் ராமதாஸ் அறிவார்.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில், பா.ம.கவுக்கு நெருக்கடி கொடுக்கப் போவது தருமபுரி மற்றும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் மட்டும்தான். இந்தத் தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை அம்மா நிறுத்தியிருக்கிறார். அதிலும், தருமபுரியில் பா.ம.கவின் பாடு ரொம்பவே திண்டாட்டம்தான். பெண்ணாகரத்தில் அன்புமணி களமிறங்கப் போகிறார். இவரை எதிர்த்து கே.பி.முனுசாமியை களமிறக்கியிருக்கிறார் அம்மா. வன்னியர் சமூகத்து மக்களிடம் அதிக செல்வாக்குள்ளவர் முனுசாமி. அன்புமணிக்கு மிகுந்த தலைவலியாக கே.பி.முனுசாமி இருப்பார். அடுத்தபடியாக, பாலக்கோட்டில் மா.செ அன்பழகன் நிற்கிறார். தருமபுரியில் வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக குண்டர் சட்டத்தில் சிறை சென்ற பு.தா.இளங்கோவன் நிற்கிறார். அதாவது, தருமபுரி எம்.பி தொகுதிக்குட்பட்ட ஆறு தொகுதிகளில் நான்கில் பிரபலமான வன்னியரை நிறுத்தியிருக்கிறார் அம்மா. இவர்களை எதிர்த்து பா.ம.க டெபாசிட் வாங்குமா என்பதே சந்தேகம்தான்” என்றார் கள நிலவரத்தை பிரதிபலித்தபடி.
அதிலும், வடமாவட்டங்களில் உள்ள 80 தொகுதிகளில் 30 தொகுதிகள் தனித்தொகுதிகளாக வருகிறது. மீதமுள்ள 50 தொகுதிகளில் 41 வன்னியர் வேட்பாளர்களை அ.தி.மு.க நிறுத்தியிருக்கிறது. 1991-ம் ஆண்டு தேர்தலில் 12 வன்னியர்களுக்குக்கூட ஜெயலலிதா சீட் கொடுக்கவில்லை. இந்தத் தேர்தலில் இவ்வளவு இடங்களை அ.தி.மு.க ஒதுக்கக் காரணமே, அன்புமணி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதுதான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். குறிப்பாக, முதலமைச்சர் வேட்பாளர் என்று அன்புமணியை முன்னிறுத்தி விளம்பரம் செய்வதை ஜெயலலிதா ரசிக்கவில்லை. ‘அன்புமணியை மிக மோசமாகத் தோற்கடிக்க வேண்டும்’ என ஸ்பெஷல் அசைன்மெண்ட்டே தருமபுரி அ.தி.மு.கவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும், ‘ என்னை எதிர்த்து தி.மு.கவில் முப்பது சீட் வாங்கி 3 சீட்தான் ஜெயித்தார்கள். எம்.பி தேர்தலில் 8 சீட்டில் ஒன்றில்தான் ஜெயித்தார்கள். அதற்குள் முதலமைச்சர் கனவு வேறயா?’ என்ற கோபம் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. ‘ வன்னியர் ஓட்டும் ராமதாஸுக்கு இல்லை, அந்நியர் ஓட்டும் அவருக்கு இல்லை’ என்று தேர்தல் முடிவுகள் அமையும் வகையில் சக்கரவியூகத்தை அமைத்துவிட்டார் ஜெயலலிதா. இதில் இருந்து பா.ம.க மீண்டெழுவது கடினம் என்கின்றனர் அ.தி.மு.கவினர்.
அ.தி.மு.கவின் இந்தக் கணக்குகள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? என்ற கேள்வியை அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டோம்.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில், பா.ம.கவுக்கு நெருக்கடி கொடுக்கப் போவது தருமபுரி மற்றும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் மட்டும்தான். இந்தத் தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை அம்மா நிறுத்தியிருக்கிறார். அதிலும், தருமபுரியில் பா.ம.கவின் பாடு ரொம்பவே திண்டாட்டம்தான். பெண்ணாகரத்தில் அன்புமணி களமிறங்கப் போகிறார். இவரை எதிர்த்து கே.பி.முனுசாமியை களமிறக்கியிருக்கிறார் அம்மா. வன்னியர் சமூகத்து மக்களிடம் அதிக செல்வாக்குள்ளவர் முனுசாமி. அன்புமணிக்கு மிகுந்த தலைவலியாக கே.பி.முனுசாமி இருப்பார். அடுத்தபடியாக, பாலக்கோட்டில் மா.செ அன்பழகன் நிற்கிறார். தருமபுரியில் வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக குண்டர் சட்டத்தில் சிறை சென்ற பு.தா.இளங்கோவன் நிற்கிறார். அதாவது, தருமபுரி எம்.பி தொகுதிக்குட்பட்ட ஆறு தொகுதிகளில் நான்கில் பிரபலமான வன்னியரை நிறுத்தியிருக்கிறார் அம்மா. இவர்களை எதிர்த்து பா.ம.க டெபாசிட் வாங்குமா என்பதே சந்தேகம்தான்” என்றார் கள நிலவரத்தை பிரதிபலித்தபடி. அதிலும், வடமாவட்டங்களில் உள்ள 80 தொகுதிகளில் 30 தொகுதிகள் தனித்தொகுதிகளாக வருகிறது. மீதமுள்ள 50 தொகுதிகளில் 41 வன்னியர் வேட்பாளர்களை அ.தி.மு.க நிறுத்தியிருக்கிறது. 1991-ம் ஆண்டு தேர்தலில் 12 வன்னியர்களுக்குக்கூட ஜெயலலிதா சீட் கொடுக்கவில்லை. இந்தத் தேர்தலில் இவ்வளவு இடங்களை அ.தி.மு.க ஒதுக்கக் காரணமே, அன்புமணி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதுதான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். குறிப்பாக, முதலமைச்சர் வேட்பாளர் என்று அன்புமணியை முன்னிறுத்தி விளம்பரம் செய்வதை ஜெயலலிதா ரசிக்கவில்லை. ‘அன்புமணியை மிக மோசமாகத் தோற்கடிக்க வேண்டும்’ என ஸ்பெஷல் அசைன்மெண்ட்டே தருமபுரி அ.தி.மு.கவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும், ‘ என்னை எதிர்த்து தி.மு.கவில் முப்பது சீட் வாங்கி 3 சீட்தான் ஜெயித்தார்கள். எம்.பி தேர்தலில் 8 சீட்டில் ஒன்றில்தான் ஜெயித்தார்கள். அதற்குள் முதலமைச்சர் கனவு வேறயா?’ என்ற கோபம் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. ‘ வன்னியர் ஓட்டும் ராமதாஸுக்கு இல்லை, அந்நியர் ஓட்டும் அவருக்கு இல்லை’ என்று தேர்தல் முடிவுகள் அமையும் வகையில் சக்கரவியூகத்தை அமைத்துவிட்டார் ஜெயலலிதா. இதில் இருந்து பா.ம.க மீண்டெழுவது கடினம் என்கின்றனர் அ.தி.மு.கவினர்.
அ.தி.மு.கவின் இந்தக் கணக்குகள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? என்ற கேள்வியை அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டோம்.
“ இந்தத் தேர்தல் பா.ம.கவுக்கு மிகுந்த சோதனையான தேர்தல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவரோடு நட்பில் இருந்த சிறிய கட்சிகள் எல்லாம் பா.ம.கவைவிட்டுப் போய்விட்டன. தி.மு.கவும் அரூர், பாலக்கோடு தவிர மற்ற தொகுதிகளில் வன்னியரை களமிறக்கிவிட்டுள்ளது. மேட்டூரில் எஸ்.ஆர்.பார்த்திபன், தருமபுரியில் தடங்கம் சுப்பிரமணி, பெண்ணாகரத்தில் இன்பசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதுவும் பா.ம.கவுக்கு கூடுதல் சோதனைதான். நாம் தமிழர் கட்சியும் நான்கு தொகுதிகளில் வன்னியரை நிறுத்தியுள்ளது. வன்னியர் வாக்குகளை வைத்தே ராமதாஸுக்கு நெருக்கடி முற்றியிருக்கிறது.
பா.ம.கவுக்கு இந்தத் தேர்தலில் மோடி அலையும் இல்லை. விஜயகாந்த் செல்வாக்கும் இல்லை. தவிர, சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட விருத்தாச்சலம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், குன்னம், சிதம்பரம் உள்ளிட்ட தொகுதிகள் வருகின்றன. சிதம்பரத்தைச் சுற்றியும் வலுவான வன்னியர்களை நிறுத்தியிருக்கிறது அ.தி.மு.க தலைமை. அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் வன்னியர் வாக்குகளை குறிவைத்தே வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன. தவிர, சமூக வலைத்தளங்களில், ‘ஜெயிக்கும் வன்னியருக்கு ஓட்டுப் போடுவோம்’ என்ற கோஷத்தைத் தொடங்கிவிட்டார்கள்.
இந்தத் தேர்தலோடு பா.ம.கவை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித் தள்ள அ.தி.மு.க வியூகம் அமைத்திருக்கிறது. இதை ராமதாஸ் எப்படிக் கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்துத்தான் பா.ம.கவின் எதிர்காலம் உள்ளது” என்றார் உறுதியாக.
ஒவ்வொரு தேர்தலிலும் திராவிடக் கட்சிகளுக்கு ஸ்கெட்ச் போடுவதில் வல்லவரான ராமதாஸுக்கு, அவரது பாணியிலேயே அ.தி.மு.க தலைமை ஸ்கெட்ச் போடத் தொடங்கிவிட்டது. தேர்தல் முடிவில் மாம்பழம் என்னவாகும் என்பது தெரிந்துவிடும்.

No comments:
Post a Comment