Monetize Your Website or Blog

Wednesday, 27 April 2016

மாநகராட்சியைக் கலங்கடித்த சன்னி லியோன் படம்: ஹைதராபாத் பரபரப்பு!

ஆந்திராவில் ஹைதராபாத்  மாநகராட்சியின் இணையதளத்தில், ஆபாச திரைப்பட நடிகை சன்னி லியோனின் நிர்வாணப்  புகைப்படம் 'ஃ ப்ளாஷ்' ஆகி,  அரசு அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




நேற்று (திங்கள்) ஹைதராபாத் மாநகாரட்சி இணையதளத்தை பார்த்தவர்கள், அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு,   நடிகை சன்னி லியோனின் நிர்வாணப் புகைப்படம் ஃபிளாஷ் ஆவதாக  புகார் கூறியுள்ளனர். அதனையடுத்து அதிகாரிகள் இவ் விவகாரத்தை தொழில்நுட்ப பிரிவிடம் கொண்டு சென்று உள்ளனர். 

நீண்ட நேர போரட்டத்திற்கு பின்னர் தொழில்நுட்ப பிரிவினர் அந்தப் புகைப்படத்தை நீக்கினர். ஆனாலும் மாநகராட்சி இணையதளத்துடன் உள்ள இணைப்பு பக்கத்திலும் ஆபாச புகைப்படம் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தது. ஒரு நாள் முழுக்க தொழில்நுட்ப பிரிவினர் போராடி சர்ச்சைக்குரிய அந்தப் புகைப்படத்தையும்  இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளனர்.
  


மக்கள் அதிகம் பயன்படுத்தும் மாநகராட்சியின் இணைய தளத்தில் இது போன்று ஆபாசப் புகைப்படம் ஃபிளாஷ் ஆனது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.



No comments:

Post a Comment