கடந்த சில ஆண்டுகளாக பைக்குகளில் டூர் செல்வதுதான் இளைஞர்கள் சாய்ஸ். காரில் செல்ல முடியாத பல இடங்களுக்கு பைக்கில் சுதந்திரமாக சென்று வர முடிவதே இதற்குக் காரணம். இதனை உணர்ந்த பைக் தயாரிப்பாளர்களும் க்ரூஸர், ஸ்போர்ட்ஸ் டூரர் என நீண்ட தூரம் பயணிப்பதற்கு ஏற்ற வகையில் பைக்குகளைத் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதில் 2 லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் சிறந்த டூரிங் பைக்குகளை பார்ப்போம்...
பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட்/க்ரூஸ் 220:
இங்கிருக்கும் பைக்குகளிலேயே விலை குறைவான க்ரூஸர் பைக் இதுதான் (99,227 ரூபாய், சென்னை ஆன் ரோடு). அதனாலேயே இந்த பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலை, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்தாண்டு பஜாஜ் அறிமுகப்படுத்தியதன் விளைவாக, மக்கள் இதற்கு அமோகமான வரவேற்பை அளித்துள்ளனர். ஸ்ட்ரீட் மற்றும் க்ரூஸ் என இரு வேரியன்ட்டில் கிடைக்கும் இந்த பைக், மெக்கானிக்கலாக ஒன்றுதான் என்றாலும், ஸ்டைலிங்கில்தான் இரண்டும் வேறுபடுகின்றன. இந்த பைக்கில் இருக்கும் 220சிசி ஆயில் கூல்டு இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, 19bhp பவரையும், 1.8kgm டார்க்கையும் வெளிப்படுத்துகின்றன.
போதுமான பவர் கிடைப்பதால், 100 கி.மீ. வேகத்தில் ஈஸியாக க்ரூஸ் செய்ய முடிகிறது. பைக்கின் அதிக நீளம் நகரத்தில் மைனஸாகத் தெரிந்தாலும், நெடுஞ்சாலையில் ஸ்டெபிளிட்டிக்கு துணைநிற்கிறது. சஸ்பென்ஷன் தனது பணியைத் திறம்படச் செய்வதால், சொகுசான இருக்கையில் அமர்ந்து கொண்டு வசதியான ஹேண்டில்பாரைப் பிடித்து ஜாலியாகப் பைக்கை ஓட்டலாம். சிட்டி மற்றும் நெடுஞ்சாலையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 40 - 45 kmpl வரை மைலேஜ் கிடைக்கும். பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட்/க்ரூஸ் 220:
இங்கிருக்கும் பைக்குகளிலேயே விலை குறைவான க்ரூஸர் பைக் இதுதான் (99,227 ரூபாய், சென்னை ஆன் ரோடு). அதனாலேயே இந்த பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலை, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்தாண்டு பஜாஜ் அறிமுகப்படுத்தியதன் விளைவாக, மக்கள் இதற்கு அமோகமான வரவேற்பை அளித்துள்ளனர். ஸ்ட்ரீட் மற்றும் க்ரூஸ் என இரு வேரியன்ட்டில் கிடைக்கும் இந்த பைக், மெக்கானிக்கலாக ஒன்றுதான் என்றாலும், ஸ்டைலிங்கில்தான் இரண்டும் வேறுபடுகின்றன. இந்த பைக்கில் இருக்கும் 220சிசி ஆயில் கூல்டு இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, 19bhp பவரையும், 1.8kgm டார்க்கையும் வெளிப்படுத்துகின்றன.
பஜாஜ் பல்ஸர் AS200 & 220 DTS-i:

பவருக்கும், வேகத்திற்கும் பெயர் பெற்ற பல்ஸர் பைக்குகள் எப்படி டூரிங் வகைக்குள் வரும்? என்ற கேள்வி பலரது மனதில் எழலாம். ஆனால் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் டூரர் செக்மெண்ட்டைக் குறிவைத்து, செமி ஃபேரிங்குடன் இந்த பைக்குகளைக் களமிறக்கியுள்ளது பஜாஜ். இதில் பல்ஸர் 220 DTS-i அறிமுகமாகி நீண்ட நாட்கள் ஆகியிருந்தாலும், அதன் விற்பனை தொய்வில்லாமல் சென்று கொண்டிருப்பதே, அந்த பைக்கின் வெற்றிக்குச் சாட்சி.
இந்த பைக்கில் இருக்கும் அதே இன்ஜின் - கியர்பாக்ஸ்தான், அவென்ஜரிலும் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஸ்போர்ட்ஸ் டூரர் என்பதை நியாயப்படுத்துவதற்காக, அவென்ஜரைவிட அதிகமான 21bhp பவரையும், 1.95kgm டார்க்கையும் வெளிப்படுத்துகின்றன. கூடுதல் பவர் மற்றும் இன்ஜின் ட்யுனிங் காரணமாக, அவென்ஜரைவிட பல்ஸர் 220 DTS-i பைக் வேகமாக இருப்பதுடன், 130கிமீ வேகம் வரை செல்ல முடிகிறது. பல்ஸர் AS200 பைக்கானது, இவ்விரு பைக்குகளைவிட சிறிய இன்ஜினைக் கொண்டிருந்தாலும்(199சிசி), அவற்றை விட அதிகமான 23.5bhp பவரையும், 1.9kgm டார்க்கையும் வெளிப்படுத்துகின்றன.

தொழில்நுட்பரீதியில் முன்னேறியிருக்கும் பல்ஸர் AS200 பைக்கின் அதிகபட்ச வேகம் 135 கிமீ! ஸ்டெபிளிட்டி, கையாளுமை, ஓட்டுதல் தரத்தில் இரண்டு பல்ஸர்களும் சிறந்து விளங்குகின்றன. 2 பீஸ் ஹேண்டில்பார் உயரமாக பொஷிசன் செய்யப்பட்டுள்ளதால், பயன்படுத்த வாட்டமாக இருப்பதுடன், இருக்கைகள் சொகுசாக இருக்கின்றன. எனவே இரு பைக்கிலும் தொடர்ச்சியாகப் பயணித்தாலும் அவ்வளவாக அலுப்பு தெரியவில்லை. பஜாஜ் பல்ஸர் AS200 பைக்கின் சென்னை ஆன் ரோடு விலை 1.09 லட்சம் மற்றும் பஜாஜ் பல்ஸர் 220 DTS-i பைக்கின் சென்னை ஆன் ரோடு விலை 1.02 லட்சம். மைலேஜைப் பொறுத்தமட்டில், இரண்டு பைக்கும் 35 - 40kmpl வரை தருகின்றன.
ஹீரோ கரிஸ்மா & கரிஸ்மா ZMR:
அவென்ஜரைத் தொடர்ந்து, ஒரு லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் மற்றொரு டூரிங் பைக் ஹீரோ கரிஸ்மா. செமி ஃபேரிங்கில் கரிஸ்மா மற்றும் ஃபுல் ஃபேரிங்கில் கரிஸ்மா ZMR என இரு வேரியன்ட்டில் இந்த பைக் கிடைக்கிறது. கரிஸ்மா பைக்கில் 223சிசி, ஏர் கூல்ட், கார்புரேட்டட் இன்ஜின் இருக்க, கரிஸ்மா ZMR பைக்கில் 223 சிசி, ஆயில் கூல்ட், ஃப்யுல் இன்ஜெக்ட்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இவை முறையே 19bhp மற்றும் 20bhp பவரையும், 1.93kgm மற்றும் 1.97kgm டார்க்கையும் வெளிப்படுத்துகின்றன. இரு பைக்கிலும் பொதுவாக 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. இரு பைக்கிலும் 100கிமீ வேகத்தில் க்ரூஸ் செய்ய முடிவதுடன், அதிகபட்சமாக 130கிமீ வேகம் வரை செல்ல முடிகிறது.

No comments:
Post a Comment