Monetize Your Website or Blog

Wednesday, 9 March 2016

சாதாரண பெண்களை, பெண் தொழிலதிபர்களாக உருவாக்கும்.. மாமியாரும், மருமகளும்...!

ந்த பரந்த உலகில் தான் மட்டுமே வாழவேண்டும். சீறும், சிறப்புமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் மத்தியில், மற்ற பெண்களையும் தொழில்முனைவோர்களாக உருவாக்கி அதில் வெற்றியும் அடைந்து வருகின்றனர் சென்னையைச் சேர்ந்த ஒரு மாமியாரும், மருமகளும்.

பெண்களை தொழில்முனைவோர்களாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கும் வெகு சிலரில் ஒருவர்தான் மகாலட்சுமி சரவணன். இவர் women entrepreneurs india என்ற அமைப்பை தோற்றுவித்து நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் பார்ட்னர் வேறுயாருமில்லை இவரது மாமியார் எஸ்.என்.மணி என்பவர்தான்.

மகாலட்சுமி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் 4 வருடம் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதன்பின் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதில் அதிகம் நாட்டம் ஏற்பட்டு women entrepreneurs india என்ற அமைப்பை தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார்.

இன்றைய சூழ்நிலையில் ஒரு தொழிலை தொடங்குவதுடன் வேலை முடிந்து விடுவதில்லை. அந்த நிறுவனத்தை சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்தின் உதவியால் மக்களிடம் பெரிய அளவில் கொண்ட சேர்க்க வேண்டும். இந்த வேலையை இந்த அமைப்பின் மூலம் சிறப்பாக செய்து வருகின்றனர் இவர்கள்.
எந்த ஒரு நிறுவனத்தையுமே கூகுள், யாஹூ போன்ற தேடல் தளங்களில் தங்களது நிறுவனங்களை முதன்மையாக கொண்டு வர முடியும் என்று கூறும் மகாலட்சுமி சர்ச் இஞ்சின் ஆப்டிமைசேஷன் வல்லுநர். இவர் இதனை பயன்படுத்தி பல புதிய பெண் தொழில் முனைவோர்களின் பொருட்களையும் சேவைகளையும் பலரிடம் கொண்டு சேர்த்து வருகிறார்.
பெண் தொழில் முனைவோர்களுக்கென ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களுக்கு தேவையான நிதி, கல்வி உதவி உட்பட பல்வேறு வாய்ப்புகள் ஏற்படுத்தி வருகின்றனர் இந்த மாமியாரும், மருமகளும்.


இவர்கள் இதுமட்டும் அல்லாமல் பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான ஸ்மார்ட்ஃபோன் வொர்க்‌ஷாப்களையும் நடத்தி வருகின்றனர். ஸ்மார்ட்ஃபோன்கள் இல்லாதவர்களை பார்ப்பதே அரிதாகிவிட்ட நிலையில் அதனை எவ்வாறு வணிக ரீதியாக பயனுள்ள விதத்தில் பயன்படுத்தலாம் என்று பெண்களுக்கு சொல்லி கொடுத்து வருகின்றனர் இந்த மாமியாரும், மருமகளும்.


No comments:

Post a Comment