Monetize Your Website or Blog

Wednesday, 2 March 2016

நோக்கியா, பிளாக்பெர்ரி கருவிகளில் 'வாட்ஸ்அப்' சேவை நிறுத்தம்?

பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான 'வாட்ஸ் அப்' வெளிவந்து 7 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் ஏழே ஆண்டுகளில் கிடுகிடு முன்னேற்றம். இன்று வாட்ஸ் அப்பில் இல்லாதவர்களை ஏளனமாக பார்க்கும் நிலை தான் பெரும்பாலும் நிலவுகிறது.

இந்நிலையில் ஆன்ட்ராய்டு ஆப்களை இயக்க, புளூ ஸ்டாக் பாேன்ற சாப்ட்வேர்களை ஏற்றியாவது வாட்ஸ்அப் பாேன்ற சமூக வலைத் தளங்களில் தங்களை ஈடுபடுத்தி காெண்டுள்ளனர்.




2009-ம் ஆண்டு 'வாட்ஸ்ஆப்' அறிமுகமான போது பிளாக்பெர்ரி, நோக்கியா கருவிகளே 70 சதவீதம் இருந்தன. ஆனால், தற்போது கூகுளின் ஆன்ட்ராய்டு, ஆப்பிளின் ஐ.ஓ.எஸ், மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் ஆகிய இயங்குதளங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களே 99.5 சதவீதம் அளவுக்கு புழக்கத்தில் உள்ளன. ஆனால், இவையெல்லாம் அப்போது 25 சதவீதம் கூட இல்லை. 

இந்நிலையில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் பிளாக்பெர்ரி, பிளாக்பெர்ரி 10, நோக்கியா எஸ்40, நோக்கியா எஸ்60, விண்டோஸ் 7.1, ஆன்ட்ராய்டு 2.1 மற்றும் ஆன்ட்ராய்டு2.2 ஆகிய இயங்குதளங்களில் 'வாட்ஸ்ஆப்' தனது சேவையை நிறுத்த உள்ளதாக அதனுடைய வலைதளத்தில் தெரிவித்துள்ளது. எனவே, பழைய இயங்குதளங்களில் உள்ள ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பவர்கள் சீக்கிரமாக அப்கிரேடு செய்து கொள்வது மிகவும் அத்தியாவசியம்.




No comments:

Post a Comment