Monetize Your Website or Blog

Wednesday, 16 March 2016

நலம் தரும் நாட்டு கோழி பண்ணை!!!

நாட்டுக் கோழியின் விலை இன்றைக்கு ஒரு கிலோ 250 ரூபாய்காரணம்நாட்டுக்கோழிஅவ்வளவாக கிடைப்பதில்லைஇதனால் இதன் இறைச்சியும் விலை அதிகமாகஇருக்கிறது.நாட்டுக் கோழி ஏன் டிமாண்ட் ஆக இருக்கிறதுநாட்டுக் கோழிகளை யாரும்"பிராய்லர்கோழிகள் போல் லட்சக்கணக்கில் பண்ணை முறையில் வளர்ப்பதில்லை.கிராமங்களில் பெண்கள் இவற்றை புழக்கடையில் தான் வளர்க்கிறார்கள்.






அதனால் இந்த கோழிகள் பெருமளவில் கிடைப்பதில்லைஆனால் பிராய்லர் கோழிகளைஇன்குபேட்டர் முறையில் பொரிக்க வைத்து எடுப்பதால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானகோழிக்குஞ்சுகளை பெற முடிகிறதுஅவற்றை வளர்த்து கறிக்கோழிகளாக மாற்றமுடிகிறது.இந்த பிராய்லர் கோழிகள் செயற்கையாகவே பிறந்து ஊக்கமருந்துகளால் உப்பியபலூன் போல பெருத்து 47 நாட்களில் 2 கிலோவை தாண்டி விடுகிறதுஇந்த கோழிகளின்நோய் எதிர்ப்பு சக்திக்காக செலுத்தப்படும் மருந்துகள் மனித உடலில் பாதிப்பைஏற்படுத்துமா என்பது பற்றி இன்னும் சரியான விளக்கம் இல்லை.
ஆக..இந்த நிலையில் நாட்டுக்கோழிகளை அதிக அளவில் உற்பத்தில் செய்தால் ஏராளமாகநாட்டுக் கோழிகள் விற்பனை ஆகும்நாட்டுக் கோழி பண்ணை வைப்பவருக்கு இதனால்லாபம் கொட்டும்.மேலும் நாட்டு கோழி பண்ணை அமைக்க பிராய்லர் கோழிகளை போலமிக அதிக செலவிலான செட் போட தேவையில்லை,சாதாரண  மிக சிறிய  அளவிலான ஓட்டைகள் கொண்ட கம்பி வலை 'பெண்சிங்போதுமானது.



இதனை கணக்கில் கொண்டு "தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்'கிராமப்புற பெண்களுக்கும்வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் நாட்டுக் கோழிவளர்ப்பது பற்றிய 3 மாத கால தொலை தூர படிப்பை வழங்க உள்ளதுதபால் வழியில்கற்பிக்கப்படவுள்ள இந்த பாடத்திட்டத்தில் கோழியினங்கள்தீவனங்கள்,நோய் கண்டறியும்முறைபண்ணை அமைத்தல் உள்பட எளிதாக நாட்டுக் கோழிகளை வளர்ப்பது பற்றிசொல்லித் தர போகிறார்கள்.
இந்த பாடத்தை படித்து விட்டால்கிராமப்புறத்தில் வேலையில்லாமல் இருக்கும்இளைஞர்கள் சிறிய அளவில் பண்ணையை தொடங்கி நடத்தலாம்பிறகு வெற்றிகரமாகபெரிய பண்ணைகளை தொடங்கலாம்இந்த நாட்டுக் கோழி வளர்ப்பு தபால் வழி படிப்பில்சேர 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்தமிழில் எழுதப்படிக்க ெத்ரிந்திருக்க வேண்டும்.இவ்வளவு தான் தகுதி.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேசிய வங்கி ஒன்றில் 220 ரூபாய்க்கு கல்வி இயக்குநர்,தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகம்மாதவரம்சென்னைஎன்றபெயருக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து கூடவே ஒரு கடிதத்தில் தங்கள் பெயர்,முகவரி மற்றும்தொலைபேசி எண்ணை எழுதி இதே முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அவர்கள் பாடத்திட்டங்களை அனுப்புவார்கள்படித்து பாஸாகலாம்இது பற்றி மேலும்விவரங்கள் அறிய 044-2555 4375, 2555 1586, 2555 1587,என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். 



No comments:

Post a Comment