என் பெயர் ஐ.நாசர். நான் கோவை மாவட்டத்தில் கோட்டைப்பாளையம் கிராமத்தில்கரூர்வாலா ஆட்டுப்பண்ணை என்ற பெயரில் கடந்த இரண்டு வருடங்களாக அறிவியல்ரீதியாக வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை வளர்த்து வருகின்றேன். முறையாகபயிற்சி பெற்று சிறந்த தொழில் நுட்பங்களைக் கடைபிடித்து பண்ணையை தொடங்குவதற்குமுன்பே பல வகையான பசுந்தீவனங்களைப் பயிரிட்டு அறிவியல் ரீதியாக பராமரித்தால்""ஆடு வளர்ப்பு'' ஒரு லாபகரமான தொழில் என்பது நான் அனுபவத்தில் உணர்ந்த உண்மை.
பசுந்தீவன உற்பத்தி:
கோட்டைப்பாளையம் கிராமத்தில் மூன்று ஏக்கர் விவசாய பூமியை குத்தகைக்கு எடுத்துகோ 4 கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கோ.எப்.எஸ்.29 தீவனச் சோளப்பயிர், வேலி மசால்,குதிரைமசால் மற்றும் அகத்தி போன்ற பசுந்தீவனங்களைப் பயிரிட்டேன். ஆடுகளுக்குதேவைப்படும் பசுந்தீவன அளவை கணக்குப்போட்டு, சிறிய சிறிய பாத்திகளை அமைத்துபசுந்தீவனங்களை முறையாகப் பயிரிட்டு வளர்ப்பதால் ஆண்டு முழுவதும் பசுந்தீவனப்பற்றாக்குறை ஏற்படுவது இல்லை.
விற்பனை வழிமுறைகள்:
நான் வியாபாரிகளுக்கு ஆடுகளை அறுப்பதற்கு விற்பனை செய்வதற்கு முன்பே எனதுஆடுகளை எடைபோட்டு, அதிலிருந்து வெட்டிய உடல் எடை எவ்வளவு கிடைக்கும் என்றுகணக்குப்போட்டு என்னுடைய ஆட்டின் மதிப்பை தெரிந்துகொண்டு விலை நிர்ணயம்செய்துகொள்வேன். பிறகு வியாபாரியிடம் விற்பனை செய்யும்போது நான் நிர்ணயித்தவிலைக்குக் குறைவாக ஆடுகளைக் கொடுக்க மாட்டேன்.
இவ்வாறு ஆடுகளை விற்பனை செய்வதால் அதிக லாபம் கிடைக்கிறது. மேலும் உயிருடன்ஆடுகளை விற்பதைவிட அவற்றை இறைச்சியாக மதிப்பூட்டி விற்பனை செய்யும்போதுமேலும் அதிக லாபம் கிடைக்கும் என்பதை உணர்ந்து ஆடுகளை அறுக்க ஒரு இடத்தைஏற்படுத்தி, போதிய வசதிகளைச் செய்து, தேவைப்படும்போது, ஆடுகளை அறுத்துஇறைச்சியாகவும் விற்பனை செய்கிறேன்.
மேலும் ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க ஆர்வமுள்ள பண்ணையாளர்கள் கீழ்க்காணும்சில முக்கிய விபரங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
- ஆட்டுப்பண்ணை தொடங்கும் பண்ணையாளரே அந்தப் பண்ணையின் முதல்வேலையாளாக இருக்க வேண்டும்.
- ஆட்டுப்பண்ணை தொடங்க முதலில் முறையான பயிற்சி அவசியம்.
- பசுந்தீவன உற்பத்தியில் முக்கிய கவனம் செலுத்தி அதிக அளவு பயறுவகைமற்றும் மரவகைப் பசுந்தீவனங்களைப் பயிரிட வேண்டும்.
- உயர்ந்த இனக்கிடாய்களையும், பண்ணை முறையில் வளர்க்கப்பட்டஆடுகளையும் தேர்வு செய்து, வாங்கி, பண்ணையை தொடங்க வேண்டும்.
- நோய் தடுப்பு, குடற்புழு மற்றும் ஒட்டுண்ணிகள் நீக்கம் போன்ற பண்ணைநடைமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
- குட்டிகளில் இறப்பைத் தடுக்க, குட்டிகள் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
- நாம் வளர்த்த ஆட்டின் மதிப்பைத் தெரிந்துகொண்டு இடைத்தரகர்கள் மற்றும்வியாபாரிகளிடம் ஏமாறாமல் உடல் எடைக்கு ஏற்ப ஆடுகளை விற்பனைசெய்தால் அதிக லாபம் கிடைக்கும்.
மேற்காணும் வழிமுறைகளை கடைபிடித்து அறிவியல் ரீதியாக ஆடுகளை வளர்த்தால்வெற்றி நிச்சயம்.
தொடர்புக்கு:
ஐ.நாசர்,
கோயம்புத்தூர். 99943 82106.
-கே.சத்தியபிரபா, உடுமலை

No comments:
Post a Comment