குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று தந்தவர் மேரி கோம். அந்த குத்துச்சண்டை நாயகிக்கு இன்று 33வது பிறந்த நாள். அவரைப்பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள் இங்கே...

கடந்த 1983-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி மணிப்பூரில் உள்ள கன்காதேய் என்ற இடத்தில் மேரிகோம் பிறந்தார். தந்தை மக்ன்தே தோபா, தாயார் அகாம் கோம். வீட்டிற்கு மூத்தவர் மேரிகோம்தான். இவருக்கு 3 சகோதர சகோதரிகள். மேரி கோம் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்டவர்.
சிறுவயதில் தடகளத்தில் ஆர்வமாக இருந்த மேரி கோம், டிங்கோசிங் என்ற குத்துச்சண்டை வீரரை பார்த்து குத்துச்சண்டை வீராங்கனையாக உருவெடுத்தார்.
கடந்த 2000-ம் ஆண்டு மணிப்பூரின் மிகச்சிறந்த குத்துச்சண்டை வீராங்கனை என்ற பட்டம் மேரி கோமுக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நடந்த கிழக்கிந்திய மாநிலங்களுக்கிடையேயான குத்துச்சண்டை போட்டியிலும் மேரி கோம் பட்டம் வென்றார்.
கடந்த 2001 முதல் 2006 ம் ஆண்டு வரை தொடர்ந்து 6 முறை தேசியச் சாம்பியனாகி, மேரிகோம் சாதனை படைத்தார். இதே காலக்கட்டத்தில் 2002, 2005-ம் ஆண்டுகளில் இரு முறை 45 கிலோ எடை பிரிவிலும் 2006- ம் ஆண்டு 46 கிலோ எடை பிரிவிலும், உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியிலும் பட்டம் வென்று சாதனை படைத்தார் மேரி கோம்.
2006-ம் ஆண்டுக்கு பிறகு இரு ஆண்டுகள் மேரி கோம் குத்துச்சண்டையில் ஈடுபடவில்லை. 2008-ம் ஆண்டு களத்திற்கு திரும்பிய மேரி கோம், ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இதே ஆண்டில் சீனாவில் நடந்த மகளிர் உலகக் குத்துச்சண்டை போட்டியில் 4வது முறையாக சாம்பியன் ஆனார்.
தொடர்ந்து 2009-ம் ஆண்டு பர்படாசில் நடந்த மகளிர் உலகக் குத்துச்சண்டையில் 5வது முறையாக பட்டம் வென்றார் மோரி கோம். பின்னர் 2010-ம் ஆண்டு குவாங்சு ஆசியப் போட்டியில் வெண்கலம் வென்றார் மேரி கோம்.
2012-ம் ஆண்டு மேரி கோம், லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று அசத்தினார். 51 கிலோ பிளைவெயிட் பிரிவில் இது சாத்தியமாயிற்று.
2014-ம் ஆண்டு ஆசியப் போட்டியில் பிளைவெயிட் பிரிவில் தங்கம் வென்றார் மேரி கோம். இது ஆசியப் போட்டியில் மேரி கோம் வென்ற இரண்டாவது பதக்கம்.
அண்மையில் முடிவடைந்த தெற்காசியப் போட்டியிலும் 51 கிலோ பிளைவெயிட் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார் மேரி கோம் .
ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற ஒரே வீராங்கனையும் மேரிகோம்தான். இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் குத்துச்சண்டை வீராங்கனையும் மேரி கோம்தான்!
மேரிகோமின் தற்போதைய ஒரே இலக்கு ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதுதாதான்!

No comments:
Post a Comment